இன்றைய காலக்கட்டத்தில் ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வது முக்கியமான ஒன்றாகும். அத்தகைய உணவுகளில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக அமைவது நெய். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இந்த நெய் பல்வேறு பயன்கள் கொண்டுள்ளது. அத்தகைய ஆரோக்கியமான மற்றும் இயற்கையான நெய்களில் ஒன்றானது உலமார்ட்டின் A2 பசு நெய். இது பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதால், உடலுக்கும் மனதுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
2. சிறந்த நெய் தயாரிப்பது எப்படி?
3. A2 பசு நெயின் ஆரோக்கிய நன்மைகள்
4. A2 பசு நெய் சேர்த்து செய்யக்கூடிய உணவுகள்
A2 என்றால் என்ன?
A2 என்பது பாலில் உள்ள ஒரு தனித்துவமான புரத வகையை (β-casein) குறிக்கும். பசும்பாலை பொதுவாக இரண்டு வகைகளாக பிரிக்கலாம்:
- A1 பால்
- A2 பால்
இவை பாலில் இருக்கும் β-casein புரதத்தின் வடிவத்தில் உள்ள சிறிய வேறுபாட்டால் ஏற்படுகிறது. இயற்கையாகவே, நாட்டு மாடுகளின் பால் A2 வகையைச் சேர்ந்தது. ஆனால் ஜெர்சி, ஹோல்ஸ்டைன் போன்ற வெளிநாட்டு மாடுகளில் A1 பால் அதிகம் காணப்படுகிறது.
சிறந்த நெய் தயாரிப்பது எப்படி?
முன்னய காலங்களில், நமது முன்னோர்கள் இயற்கையான முறையில் நெய் தயாரித்து, பயன்படுத்தி வந்தனர். அத்தகைய இயற்கையான வீடு முறை நெய் எவ்வாறு தயாரிப்பது என்று காண்போம்.

1. தூய A2 பசுப்பாலை சேகரித்தல்:
முதல் கட்டமாக, நாட்டு மாடுகள் வளர்ப்பவர்களிடமிருந்து தூய A2 பசுப்பால் சேகரித்து வைக்க வேண்டும். இயற்கையான முறையில் மட்டுமே பராமரிக்கப்படும், இரசாயனமில்லா தீவனத்தில் வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து இதற்கான பால் எடுக்கப்படுகிறது. மாடு வளர்ப்பவர்கள் இல்லாத பட்சத்தில் நல்ல உயர்தரமான A2 பால் கிடைக்கும் கடைகளில் வாங்கி உபயோகப்படுத்த வேண்டும்.
2. பாலை தயிராக்குதல்:
பிறகு பாலை நன்றாக கொதிக்க வைக்கவும், கொதிக்க வைத்த பால் சற்று குளிரும்வரை காத்திருக்கவும். அதிக குளிர்ச்சியாகவும் வேண்டாம், அதிக வெப்பமாகவும் இருக்க வேண்டாம். கைகள் பொறுக்கும் அளவிற்கு சூடாக இருந்தால் போதும். பின்பு அந்த வெதுவெதுப்பான பாலில் ஒரு மேசைக் கரண்டி தயிர் சேர்த்து நன்றாக கிளறி அவற்றை மூடி போட்ட பாத்திரத்தில் வைத்து 6 முதல் 8 மணி நேரம் வரை வைக்க வேண்டும்.
சின்ன டிப்ஸ் – பால் ரொம்ப சூடா இருந்தா தயிர் கெட்டுப்போயிடும், ரொம்ப குளிரா இருந்தா கெட்டி ஆகாது. வெதுவெதுப்பாக இருக்கணும்.
3. வெண்ணெயை பிரித்தெடுக்கும் முறை:
தயிர் நன்றாக அமைந்த பிறகு அதை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி, பிறகு குளிர்ந்த நீர் சேர்க்கப்பட்டு, மரத்தினாலான மத்தைக் கொண்டு வேகமாக கடைந்தால், தயிரில் இருந்து வெண்ணெய் மேலே மிதந்து வரும். அதை கைகள் அல்லது கரண்டி கொண்டு எடுத்து சேகரித்து வைக்கவேண்டும்.
ஒரு சின்ன விஷயம் ஷேர் பண்ணிக்கிறேன்:
வெண்ணெயை எடுத்து வெச்சிட்டா முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிறோம். ஆனா… அது தான் ஆரம்பம்!
இதுக்கப்புறம்ந்தா ஒரு real magic இருக்கு….. அதான் மோர்!
வெய்யிலோடு fight பண்ணற body-க்கு, இதுபோல ஒரு natural AC வேற எங்க கிடைக்கும்?அது மட்டும் இல்ல, இதுல கொஞ்சம் இஞ்சி, உப்பு, மிளகு தூள், கறிவேப்பிலை போட்டா? அதோட taste வேற level .

4. வெண்ணையிலிருந்து நெய் பிரித்தெடுக்கும் முறை
சுத்தமாக தயாரித்த வெண்ணெயை ஒரு கனமான பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு , பிறகு மெதுவான தீயில் வைத்து, வெண்ணெயை நன்கு உருக வைக்க வேண்டும். வெண்ணெய் நன்கு உருகத் தொடங்கும் போது, அதில் இருந்து மெல்ல நெய் தனியாக பிரிந்து மேலே தோன்றும். வெண்ணெயில் இருந்து நெய் முழுமையாக பிரிந்து தங்க நிறத்தில் வரும்வரைக் காத்திருக்க வேண்டும். இப்பொழுது வெண்ணெயில் நெய் உருக்குவது எப்படி என்று தெரிந்துக் கொண்டோம்.
இதுலையும் ஒரு சின்ன tips பாப்போமா? – தீயை சரியாக கையாளனும். அதிகமான தீயில வெச்சா வெண்ணை சீக்கிரம் கருகி போய்டும்… சீரான தீயில பொறுமையா காத்திருந்தா அதுக்கான பலன் கண்டிப்பா கிடைக்கும்.
5. நெய்யை வடிகட்டி சேமித்தல்:
நெய் முழுமையாக ஆறியதும், அதை ஒரு சுத்தமான வடிகட்டி அல்லது மெல்லிய பருத்தி துணியைக் கொண்டு மெதுவாக வடிகட்டி உள்ளே இருக்கும் திடப்பொருள்கள் (milk solids) நெய்யில் கலக்காமல் தனியாகப் பிரித்தெடுக்க வேண்டும்.
வடிகட்டிய நெய்யை கண்ணாடி பாட்டிலில் அல்லது பீங்கான் ஜாடியில் ஊற்றி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இது நெய்யின் தூய்மையையும், நறுமணத்தையும் நீண்ட நாட்கள் பாதுகாக்க உதவும்.
A2 பசு நெயின் ஆரோக்கிய நன்மைகள்:

- செரிமான சக்தியை மேம்படுத்தும் – இயற்கையாகவே உள்ள A2 புரதம், குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
- மூளையின் வளர்ச்சிக்கு உதவும் – நினைவாற்றலை அதிகரித்து, குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து வழங்கும்.
- உடலின் எடையை சமநிலைப்படுத்தும் – நல்ல கொழுப்புகள் உள்ளதால், மெட்டபாலிசத்தை (Metabolism) அதிகரிக்க உதவும்.
- தோல் மற்றும் முடிக்கு பாதுகாப்பு – உடலில் உள்ள ஈரப்பதத்தை பராமரித்து, மென்மையான தோல் மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
- லாக்டோஸ் இன்டாலரன்ஸ் உள்ளவர்களுக்கும் பாதுகாப்பானது – சிலருக்கு பால், தயிர் மாதிரியான பானங்கள் குடித்தால் வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படும். இது லாக்டோஸ் இன்டாலரன்ஸ் எனப்படும்.
- ஆனால் A2 வகை பாலில் லாக்டோஸ், A1 கேஸின் மாதிரியான செரிமானத்துக்கு கடினமான பொருட்கள் இருக்காது. எனவே இதை எளிமையான உடல்களும் ஏற்றுக்கொள்ளும்.
- அதனால், லாக்டோஸ் பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் மருத்துவரின் ஆலோசனையோடு A2 நெய்யை சாப்பிடலாம்.
A2 பசு நெய் சேர்த்து செய்யக்கூடிய உணவுகள்:

இட்லி, தோசை :
- தோசைக்கு மேலே சிறிதளவு நெய் ஊற்றி சமைத்தல் தோசை முருகலாகவும், சுவையாகவும் இருக்கும். அதே போல் நெய்யை இட்லி பொடியுடன் கலந்து சாப்பிட்டால் சுவையும் ஆரோக்கியமும் ஒரு சேர கிடைக்கும்.
பருப்பு சாதம்:
- பருப்பு சாதத்தில் பசு நெய் கலந்து சாப்பிட்டால், சுவையும், ஆரோக்கிய நன்மைகளும் அதிகரிக்கும்.
நெய் லட்டு:
- கோதுமை மாவு, கடலை மாவு, அல்லது ரவை வைத்து லட்டு செய்யும் போது, பசு நெய் சேர்த்தால், அது சுவையானதும், ஆரோக்கியமானதும் ஆகும்.
சத்துமாவு கஞ்சி:
- சத்துமாவு கஞ்சியில் பசு நெய் சேர்த்து குடித்தால், ஜீரணம் எளிதாக நடைபெறும்.
- கருப்பு உளுந்து கஞ்சியில் பசு நெய் சேர்த்து குடித்தால், எலும்பின் வலிமை மற்றும் மூட்டு நலத்திற்குப் பெரும் பயன் அளிக்கும்.
- பசு நெய் சேர்க்கப்பட்ட சத்துமாவு குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நரம்பு ஆரோக்கியத்திற்கும் பயன் அளிக்கும்.
குழந்தைகளுக்கான நெய் கலவை:
- திணை, ராகி, சாமை, குதிரைவாலி, வரகு, கம்பு, பாசிப்பயறு போன்ற ஊட்டச்சத்து மிகுந்த மாவுகளை பசு நெய்யில் வறுத்து குழந்தைகளுக்கு களி அல்லது கூழாகக் கொடுக்கலாம்.
A2 பசு நெய் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட, சிறந்த ஊட்டச்சத்தைக் கொண்ட ஒரு உணவுப் பொருளாகும். இது உடல் நலத்தைக் காப்பதோடு, உணவுகளுக்கு சுவையும், நறுமணமும் வழங்குகிறது. தினசரி உணவில் A2 பசு நெயைச் சேர்த்து, ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வாழ்க்கையை அனுபவிக்கலாம்!
நெய் செய்யும் முறையையும் பார்த்தாச்சி… இப்போ இருக்கும் இந்த பிஸி வாழ்க்கை முறையில் உங்களால நேரம் செலவழிச்சு வீட்டிலேயே நெய் செய்ய முடியலைனா, உலமார்ட் இணையதளத்தில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட A2 நெய் கிடைக்கும் அதை வாங்கி, உங்களுக்குப் பிடித்த வகையில் நம்பிக்கையுடன் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இயற்கையை நேசிப்போம், ஆரோக்கியத்தை காப்போம்!