வரகரிசி, சங்க காலம் முதல் நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த தானியம் ஆகும். கோவில் கலசங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வராகரிசியினை பயன்படுத்திய பழக்கம் கொண்டவர்கள் நம் தமிழர்கள். இதற்கு இடியை தாங்கும் அளவிற்கு சக்தி உள்ளது. இது அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியது. வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகம் விளையும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை அன்றாட உணவில் எடுத்து கொள்வது நல்லது.
வரகில் இருக்கும் புரதச்சத்தால் சிறுநீரகத்தில் நச்சு சேராமல் தடுக்கிறது. இதனால் சிறுநீரக கற்கள் போன்றவை தடுக்கப்படுகிறது.
இதில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாக உள்ளதால் மலச்சிக்கல், வயிறு உப்பிசம் மற்றும் செரிமான கோளாறுகளுக்கு நல்ல ஒரு தீர்வு ஆகும்.
இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
உடல் சூட்டை தனித்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது.
கண்புரை, கண்களில் ஏற்படும் வீக்கம் போன்ற கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.
ரத்த ஓட்டத்தை சீராக செயல்பட வைக்கிறது.
வயிறு மற்றும் குடல் புண் குணமடையும்.
பலருக்கும் பல காரணங்களால் உடலில் புண்கள், காயங்கள் ஏற்படுகின்றன. வரகரிசியை அன்றாட உணவில் எடுத்து கொண்டு வந்தால் இப்படிப்பட்ட காயங்கள் வராமல் தடுக்கிறது. மேலும் பாதத்தில் ஏற்படும் வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது.
வரகு அரிசி பொங்கல்
வரகு அரிசி புலாவ்
வரகு அரிசி அடை
வரகு அரிசி தோசை
வரகு அரிசி தட்டை
வரகரிசி கிச்சடி
வரகரிசி சாதம்
வரகரிசி பணியாரம் மற்றும் பல வகையான பண்டங்கள் செய்ய ஏற்றது.