அஞ்சறை பெட்டியில் மிளகு-கின் பங்கு மிக முக்கியமானது. பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் மிளகில் உள்ளது. மிளகுடன் சேர்த்து சமைக்க உணவின் சுவை அதிகரிக்கிறது.
மிளகு, வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமில சுரப்பை அதிகரித்து, முறையான செரிமானத்திற்கு உதவும்.
மேலும், வயிற்று உபாதை(வலி), வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு, வாய்வுத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் இருக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், குடல் நோய்களை சரி செய்ய உதவுகிறது.
இதயம் மற்றும் உடல் எடை: மிளகின் மேல் புற தோலில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட் - கொழுப்புச் செல்களை உடைத்தெறிக்க உதவும். உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், மிளகை பொடி செய்து அன்றாட உணவோடு சேர்த்து வந்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகளவு கலோரிகளை எரிக்க உதவும்.
மிளகு மார்பக சளியை கரைக்க/இளகச் செய்ய உதவும். மிளகில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் குணங்கள், சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.
காய்ச்சல்/ஜுரம் சுக்கு, மிளகு, திப்பிலி கஷாயமாக அருந்த உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கி காய்ச்சல்/ஜுரம் குறைய துவங்கும்,
ஆஸ்துமா: ஒரு டம்ளர் வெந்நீரில் 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் கலந்து தினமும் 2-3 வேளை குடித்து வர ஆஸ்துமா குறையும். மேலும், சுவாச மண்டலம் சுத்தமாகும்.
பற்கள்: மிளகுத் தூள் மற்றும் உப்புடன் சேர்த்து பற்பொடியை போல் பயன்படுத்த, ஈறுகள் பலப்படும் மற்றும் உறுதியான பற்கள் பெறலாம். மேலும், துர்நாற்றம் மற்றும் ஈறுகளில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படுவதைக் குறையும்.
புற்று நோய் : மஞ்சள் மற்றும் மிளகு, உணவோடு உன்ன புற்று நோயின் தாக்கம் நாளடைவில் குறைக்கும்.
மிளகு கொண்டு செய்யப்படும் உணவு வகைகளில் ஒரு சில : :