பருவங்கள் மாறினாலும் குழந்தைகளின் கற்பனை மற்றும் சுவாரஸ்யத்தை ஊக்குவிக்கும் விளையாட்டுப் பொருட்களுக்கான முக்கியத்துவம் குறையவில்லை. குழந்தைகளின் சிறந்த பொழுதுபோகிற்கும், கற்பனை திறன் மேம்பாட்டிற்கும் சிறந்த துணையாக பண்டைய காலத்திலிருந்தே சிறிய மண் சமையல் பொருட்கள் (சொப்பு சாமான்) இருந்துவருகின்றது.
இவை பாரம்பரிய மண் கைவினைப் பொருட்களால் ஆனது மட்டுமல்லாமல், குழந்தைகளின் விளையாட்டு வழிமுறைகளுக்கு மகிழ்ச்சியை சேர்க்கின்றன. நம்முடைய குழந்தை பருவத்தில் சொப்பு சாமான்கள் இன்றியமையாதவை. அதன் சிறப்பையும் அதனால் வரும் மகிழ்ச்சையையும் அனுபவித்த நாம் அதை நம் அடுத்த தலைமுறையினருக்கு கொடுப்பது நம் கடமையாகும்.
ஏன் சொப்பு சாமான்கள் குழந்தைகளின் விளையாட்டு பொருட்களில் முதன்மையானது, அதன் தனிச்சிறப்புகள் என்னென் என்று கீழ் வரும் பகுதிகளில் காணலாம்.
1.சொப்பு சாமான்களின் 5 தனிச்சிறப்புகள்
2.சொப்பு சாமான் விளையாட்டின் பிற பயன்கள்
3.விளையாட்டுப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை
சொப்பு சாமான்களின் 5 தனிச்சிறப்புகள்:

1) அழகான வடிவமைப்பு மற்றும் பாரம்பரியம் மிக்கது:
மண் சமையலறை சொப்பு சாமான்கள் பாரம்பரிய தமிழ் கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக உள்ளன. கிராமங்களில் இந்த வகையான சொப்பு சாமான்கள் வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை மண்ணின் இயற்கை அழகை குழந்தைகளின் கைகளில் கொண்டுவருகின்றன. அது மட்டும் அல்லாமல் பெரியவர்கள் உபயோகிக்கும் சமையல் பாத்திரங்கள் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த சிறிய அளவு சொப்பு சாமான்கள் குழந்தைகளின் கவனத்தை மிகவும் ஈர்க்கும்.
2) பாதுகாப்பான பொருட்களால் ஆனது:
இன்றைய காலக்கட்டத்தில் சில பொருட்கள் பிபிஎ(BPA) பிளாஸ்டிக், செயற்கை நிறமிகள் மற்றும் செயற்கை வாசனை பொருட்கள் போன்ற கல்படங்களுடன் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுகின்றன. இவை குழந்தைகளின் சருமத்திற்கு அல்ர்ஜி, சுவாச பிரச்சினை போன்றவற்றை ஏற்படுத்தலாம். அனால் இந்த மண் சமையலறை விளையாட்டுப் பொருட்கள் இயற்கையான களிமண்ணினால் செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். இதனால் குழந்தைகள் விளையாட்டின்போது எந்த ஆபத்தும் இல்லாமல் விளையாடி மகிழலாம்.
இந்த மண்ணினால் செய்யப்பட்ட சொப்பு பொருட்களால் குழந்தைகளின் உடல் நலத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வராது. மற்றும் இது நம் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காது.
3) படைப்பாற்றல் அதிகரிக்க உதவுகிறது:
- மண் சமையலறை சொப்பு சாமான்கள் மூலம் குழந்தைகள் சின்ன சின்ன கதைகளை உருவாக்கி நடிக்கலாம்.
- சாதம், குழம்பு போன்றவற்றை கற்பனை செய்து விளையாடுவதோடு மட்டுமல்லாமல் நமது இந்த சொப்பு சாமானின் மூலம் நாம் உண்மையான சமையலுக்கான உணவுகளையும் சமைத்து மகிழலாம்.
- குழந்தைகள் தங்கள் பெற்றோர்களைப் போல நடித்து குடும்பத்தின் பொழுதுபோக்கு கதைகளை உருவாக்கலாம்.
- இந்த விளையாட்டுகள் குழந்தைகளின் கற்றலையும் உறவுகளின் முக்கியத்துவத்தையும் வளர்க்க உதவுகின்றன.
4) உறவுகள் மேம்பட வாய்ப்பாக உள்ளது:
மண் சமையலறை விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளுக்கு புது அனுபவங்களை ஏற்படுத்துவதோடு, பெற்றோர்களுடன் நெருக்கமான நேரத்தை செலவிடும் வாய்ப்பையும் வழங்குகிறது. இது குழந்தைகளின் உடல், மனம், சிந்தனை வளர்ச்சிக்கு உதவும்.
- பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் இணைந்து விளையாடுவதன் மூலம், குடும்ப உறவுகள் மேலும் நெருக்கமாகும்.
- ஒரு குழுவாக செயல்படுவதால், குழந்தைகளுக்கு ஒற்றுமை குணம் வளரும்.
- வழிகாட்டல் மற்றும் பொறுமை போன்ற அடிப்படை வாழ்வியல் நெறிமுறைகளை குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து கற்றுக்கொள்வார்கள்.
5) தற்சார்பு திறனை வளர்கிறது:
சிறுவயதிலேயே தங்கள் உணவை தாங்களாகவே சமைத்து அதை நண்பர்களுடன் பகிர்ந்து உண்ணும் போது, குழந்தைகளின் தற்சார்பு திறன் வளர உதவியாக இருக்கும். அவர்களுடைய தன்னம்பிக்கை மேம்படும்.
- இளம் வயதிலேயே உணவு தயாரிக்கும் ஆர்வம் வளர, மண் சமையலறை விளையாட்டு சிறந்த தேர்வாக இருக்கும்.
- உணவின் முக்கியத்துவம், சமையல் முறைகள், மற்றும் ஊட்டச்சத்து குறித்த அறிவை விளையாட்டு மூலமாக குழந்தைகள் பெறலாம்.
- ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், உணவுகளை சரியான முறையில் பயன்படுத்தும் பழக்கம் வளர்கிறது.
சொப்பு சாமான் விளையாட்டின் பிற பயன்கள்:

1) கை இயக்க திறன் (Fine Motor Skills) மேம்படுகிறது:
- சிறிய சொம்பு, தேக்கரண்டி போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் விரல் நுனி பிடிப்பு (pincer grip) திறன் மேம்படும்.
- சிறிய பொருட்களை எடுப்பது, கலப்பது, ஊற்றுவது போன்ற செயல்கள் கை விரல் மற்றும் கண் ஒருங்கிணைப்பு திறனை மேம்படுத்தும் (Hand-eye Coordination).
2) சிந்தனை மற்றும் தீர்வுக்கான திறன் வளர்கிறது
- வெவ்வேறு சமையல் முறைகளை மண் சமையலறை விளையாட்டில் கற்றுக்கொள்வதால், குழந்தைகள் புதுமை மிக்க சிந்தனையை வளர்த்துக்கொள்கின்றனர்.
- உணவுப் பொருட்களை மாற்றி மாற்றி முயற்சிப்பதால், படைப்பாற்றல்(Creativity) அதிகரிக்கும்.
- சமையலில் ஏற்படும் நிறை குறைகள் (தண்ணீரின் அளவு, உப்பின் அளவு, சுவையின் கணிப்பு) போன்றவற்றைத் தெரிந்துக்கொண்டு தீர்ப்பதற்கான திறன் வளர்கிறது.
3) கல்வியியல் மேம்பட வழிவகுக்கிறது
- குழந்தைகள் எண்ணிக்கைகளைப் புரிந்துகொள்வதற்கும் (Ex: இரண்டு தேக்கரண்டி மாவு, ஒரு கப் பால்), அளவீடு, கணித நுணுக்கம் வளர்ச்சிக்கு இது உதவும்.
- வண்ணங்களை அடையாளம் காணவும், பொருட்களின் வடிவம் மற்றும் பயன்பாடுகளை தெரிந்து கொள்ளவும் உதவுகிறது.
விளையாட்டுப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை:
குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை தேர்ந்தெடுக்கும் போது அவற்றின் பாதுகாப்பு, தரம், வயதிற்கு ஏற்ற அமைப்பு, மற்றும் பயன்கள் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. கீழே, குழந்தைகளுக்குப் பொருத்தமான விளையாட்டுப் பொருட்களை தேர்வுசெய்ய முக்கியமான சில ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பான பொருட்கள்:
- குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டுப் பொருட்கள் நச்சுத்தன்மையற்ற, மலிவான பிளாஸ்டிக் இல்லாத, மண்ணால் அல்லது மரத்தால் தயாரிக்கப்பட்டதாக இருப்பது சிறப்பு.
- BPA கலப்படம் இல்லாதவையா என பார்த்து வாங்க வேண்டும். பிபிஏ என்பது சில பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படும் ஒரு ரசாயனப் பொருள். இது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அதனால், பிபிஏ இல்லாத பொருட்களை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
- முனைகள் கூர்மையற்ற பொருட்களாக இருக்க வேண்டும். காரணம், குழந்தைகள் விளையாடும் போது தாங்களே அறியாமல் தங்களையோ அல்லது உடன் விளையாடுபவரையோ காயப்படுத்தலாம்.
- மிக சிறிய பொருட்கள் (Small Parts) இருக்கக்கூடாது, ஏனெனில், விவரம் அறியா பிள்ளைகள் அந்த சிறிய பொருட்களை கண், காது, மூக்கில் இட்டுக்கொள்ளலாம். சில நேரங்களில் அதை விழுங்கவும் முயற்சிக்கலாம். இது மிகவும் ஆபத்தை விளைவிக்கும்.
சிறந்த தரம் மிக்கப் பொருட்கள்:
- உள்ளூர் கைவினை தயாரிப்புகளை வாங்குவது சிறந்த தேர்வாக இருக்கும்.
- தரமான விளையாட்டுப் பொருட்களை வழங்கும் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் பொருட்களை தேர்வு செய்வது மிக முக்கியம். மேலும் உலகளாவிய தரச்சான்றுகள் (Certified) உள்ளவை என உறுதி செய்திருக்க வேண்டும்.
- விலையுயர்ந்தப் பொருட்கள் என்பதனால் சிறந்த தரத்திற்குச் சமமானதல்ல. பொருட்களின் தயாரிப்புத் தகவல்கள், பாகங்கள், மற்றும் மதிப்பீடுகளை சரிபார்க்க வேண்டும்.
மண் சமையலறை விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளின் கற்பனைத் திறனை அதிகரிக்கின்றன. அவற்றின் மூலம் குழந்தைகள் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தின் பெருமையையும் அனுபவிக்க முடிகிறது. உங்கள் குழந்தைகளின் சிறிய பொம்மை உலகத்தில் மண் சமையலறை விளையாட்டுப் பொருள்களை சேர்ப்பதன் மூலம் அவர்களின் கற்பனை கதவுகள் திறக்கும்.