
- Search
- Language
Language
- 0Cart
களிமண் பொம்மைகள் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில், தேவையான அளவு களிமண்ணை எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் தேவைப்பட்டால் சிறிது நீர் தெளித்து, மண்ணை நன்கு பிசைந்து மென்மையாக மாற்றவும்.
பிறகு, உங்களுக்கு தேவையான வடிவங்களை உருவாக்கவும். தேவைப்பட்டால் சிறிய பூரி கட்டை பயன்படுத்தியும் உருவாக்கலாம்.
உருவாக்கிய பிறகு, அதை ஒரு ஈரமில்லாத இடத்தில் வைத்து உலர வைக்கவும்.
பின்பு அதனை மைக்ரோ ஓவென் இருப்பின் அதனைப் பயன்படுத்தலாம் அல்லது நெருப்பிலிட்டு சுட வைக்கலாம். . அவ்வாறு செய்யும்போது மண் மேலும் உறுதியாக மாறும்.
வீட்டு அலங்கார பொருட்கள் செய்வது எப்படி என்று நினைக்கிறீர்களா இந்த களிமண்ணைப் பயன்படுத்தி உங்கள் குழந்தைகளுடன் இணைந்து அலங்கார பொருட்கள் மட்டுமல்லாமல் நவராத்திரி கொலு பொம்மைகள், களிமண் சிற்பங்கள் என உங்களின் கற்பனைக்கு தோன்றுவதை செய்து மகிழலாம்.
ஆம், இது இயற்கையான களிமண், ரசாயனமற்றது, குழந்தைகளுக்கும் பாதுகாப்பானது.
களிமணை மென்மையாக்கி, கைகளால் வடிவமைத்து, காற்றில் அல்லது நெருப்பில் சுட்டு உலர விடலாம்.
3 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு.
ஆம், இது சிறந்த கிப்ட் பொருட்கள் மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் உருவாக்கவும் சிறந்த தேர்வு.
ஆம், டெரகோட்டா நகைகள் உருவாக்கவும் இது மிகச் சிறந்தது.