Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

வீட்டு அலங்கார பொருட்கள் | கைவினைப் பொருட்கள் | திருமண பரிசு பொருட்கள் | பண்டிகை கிப்ட் பொருட்கள்.
இயற்கையின் அழகையும், பாரம்பரியத்தின் நுட்பத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் வகையில் இந்த களிமண் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முழுமையாக இயற்கையான களிமண் கொண்டு செய்யப்பட்டதால் இவை, சுற்றுசூழலுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் உள்ளது. ஒவ்வொரு பொருளிலும் கைகளால் தீட்டிய அழகான கோலம் இருப்பதால், இவை பார்வையாளர்களை வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
பண்டிகை காலங்களில், குறிப்பாக நவராத்திரி கொலு, தீபாவளி, புது மனை புகு விழா போன்ற சிறப்பு தருணங்களில், இந்த களிமண் பொருட்கள் உங்கள் இல்லத்துக்கு ஒரு தனி பெருமையையும், பாரம்பரியத்தையும் சேர்க்கின்றன. மேலும், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, இவை நினைவாக வழங்கக்கூடிய அருமையான கிப்ட் ஆகவும் திகழ்கின்றன. குழந்தைகள் விளையாடவும், பெரியவர்கள் அலங்காரம் செய்யவும், பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பாசமுடன் கொடுக்கும் ஓர் அழகிய முயற்சியாகும்.
1) அடுப்பு, 2) பெரிய மண்பானை, 3) சிறிய மண்பானை, 4) வடி தட்டு, 5) தட்டு, 6) கிண்ணம், 7) குடம், 8) தண்ணீர் குவளை, 9) வாணல், 10) தோசை தவா, 11) குழம்பு சட்டி.
அழகிய கோலம் டிசைன் உடன் களிமண் மினியேச்சர் கிச்சன் செட்
இந்த டெரகோட்டா மினியேச்சர் சமையல் செட், தமிழ் பாரம்பரிய வாழ்க்கை முறையின் தனித்துவத்தையும் மற்றும் நம் மூதாதையரின் பாரம்பரிய சமையல் கலாசாரத்தின் நுட்பங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுப்பில் உள்ள ஒவ்வொன்றும் (பாத்திரம், அடுப்பு, கரண்டி, மற்றும் பிற சமையல் உபகரணங்கள்) இயற்கையான களிமண்ணால் செய்யப்ட்டப் பொருட்கள். மேலும் இதனை சிறப்பிக்க, ஒவ்வொரு பொருளிலும் அழகிய கோலம் கைகளால் வரையப்பட்டுள்ளது. இது இந்த பொருட்களின் அழகை மேலும் உயர்திக் காட்டும் வகையில் உள்ளது.
இதனை பயன்படுத்தி விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் கற்பனைத் திறம் மேலும் அதிகரிக்கிறது. குழந்தைகளின் கை இயக்கத் திறனும், பார்வைத் திறனும் மேம்படுகிறது.
மேலும், இந்த களிமண் மினியேச்சர் செட் உங்கள் வீட்டிற்கு அழகு சேர்க்கும் அலங்கார பொருட்களாகவும், நவராத்திரி கொலு காலங்களில் அழகு சேர்க்கும் பொருளாகவும், மற்றும் திருமண நாள் பரிசு பொருட்கள் மற்றும் புது மனை புகு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு மனதைக்கவரும் பரிசுப் பொருட்களாகவும் பயன்படுத்தலாம்.
No reviews yet. Be the first to share your experience!