பாரம்பரிய சிவப்பு அரிசி வகையும் அதன் பலன்களும்

at-ig

Manikandan Arumugam

ஜூலை 22 2021


        பாரம்பரிய சிவப்பு அரிசி வகையும் அதன் பலன்களும்

மனிதன் தன்னுடைய உணவு தேவைக்காக அரிசியை விவசாயம் செய்து விளைவித்தது சுமார் 8000-9000 ஆண்டுகள் என உலகின் தொல்பொருள் ஆய்வின் மூலமாக நாம் அறியலாம்.  இன்றளவில் உள்ள உலக மக்கள் தொகையில் ஐம்பது விழுக்காடு அளவிற்கு மக்கள் தங்களின் தினசரி உணவாக அரிசியை பயன்படுத்தி வருகிறார்கள்.

மக்களின் பசியை போக்க உதவிய அரிசி கஞ்சி, கொடுத்து உதவியதால் அரசன் என்றும் அரசி என்றும் மன்னர்களை அழைத்தார்கள். இந்தியமக்களின் கலாச்சாரத்துடன் கலந்து அரிசி என்னும் இந்த தானியம். 

கோவில்களில் பிரசாதம், பண்டிகைகளில் பொங்கலாகவும், சுப நிகழிச்சிகளில் விருந்தாகவும். ஆடிமாத கூழ்ழாகவும். அரிசி தன்னுடைய பங்கு வகிக்கிறது.  சைவம் மற்றும் அசைவ உணவுக்களுக்கு ஏற்ற உணவு அரிசி.

அரிசியும் அதன் நிறமும்.

இப்போது நாம் பயன்படுத்தும் பெரும்பாலான அரசின் நிறம் வெள்ளை, அதன் காரணமாக அரிசி என்றதும் நம்மில் பலரது நினைவில் தோன்றுவது வெள்ளையான அரிசி மட்டுமே. 

ஒவ்வொரு மண்ணிற்கும் ஒரு தன்மை இருக்கும். அதில் விளையும் விளைபொருட்களை அந்த மண்ணின் தன்மைக்கும் ஏற்றது போல தகவமைப்பது இயற்கையானது. 

உதாரணமாக: 

சிவப்பு நிற அரசி வகைகள் தென்னிந்திய பகுதியை சார்ந்தது. கருப்புகவுணி அல்லது பிளாக் ரைஸ் -சீனாவை சேர்ந்தது.  

வெள்ளை நிற அரிசி வகைகள் ஜப்பான், தாய்லாந்து, தென்னிந்திய சார்ந்தது. 

அரிசின் நிறம்:

தற்போது கிடைக்கும் அல்லது வளரும் வகைகளில் அரிசியின் நிறமானது பத்திற்கும் மேற்பட்ட நிறங்கள், நமது தமிழகதில் நான்கு நிறங்களில் அரிசி கிடைக்கிறது. அவை 

நாம் தினசரி பயன்படுத்த கூடிய பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பற்றி அறிந்து அதனை பயன்படுத்தி மருத்துவ பயன்களை பெறுவோம்.

மாப்பிள்ளை சம்பா:

மாப்பிள்ளை சம்பா அரிசியின் பூர்விகம் தமிழகம், பண்டைய மக்கள் வீரவிளையாடிடல் வெற்றி பெறுவோருக்கு தங்களின் மகளை திருமணம் செய்து வைப்பது வழக்கமாக பின்பற்றப்பட்டது. குறிப்பாக, இளவட்ட கல்லினை தங்களின் தோள்பட்டை வரை தூக்கி பின் புறமாக கீழே தள்ளி விடவேண்டும். இதைப்படிக்க எளிதாகத்தான் இருக்கும். இளவட்ட கல் உருளையானது. எந்த ஒரு பிடிமானமும் அற்றது. இதன் எடை 90-120கிலோ வரை இருக்கும். ஊரில் உள்ள இளைஞர்கள் இவ்வகையான இளவட்ட கல்லை தூக்கி தங்களின் கிராமம் மக்களிடம் பாராட்டுதலை பெறுவார்கள்.

பூங்கார் அரிசி:

தற்போது உள்ளது போல் பிரசவ மருத்துவம் என்பது பண்ணடைய மக்கள் மருத்துவமனையில் பார்க்காமல், வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர், தாய் மற்றும் சேய் முழு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி. கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்ட சத்துமிக்க பத்திய உணவுகளை கொடுக்கப்படும். அந்த பத்திய உணவில் முக்கிய பங்கு பூங்கார் அரிசிக்கு உண்டு. 

கருத்தரித்த முதல் குழந்தைக்கு பாலுட்டும் வரை பூங்கார் அரிசி கொடுக்கப்பட்டுகிறது. மேலும், பூப்புடைந்த பெண் குழந்தைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. 

ஒட்டுடையான் அரிசி:

ஒட்டடையான் அரிசி சிவப்பு அரிசி வகையாகும். கருப்புகவுணி அரிசிக்கு நிகரான அரிசியாக கருதப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும். சர்க்கரை குறைபாடுகளை குறைக்க உதவும் Low Glycemic Index கொண்ட அரிசி. மேலும், அத்தியாவசியமான நுன்னூட்டச்சத்துக்கள் கொண்ட அரிசி ஒட்டுடையான் அரிசி.

வாலன் சம்பா:

தமிழகத்தின் பாரம்பரிய சிவப்பு அரிசி வகை சார்ந்தது வாலன் சம்பா. சுமார் 300 ஆண்டுகளாக கடைமடை பகுதி விவசாயிகள் பயிரிட்டு வருகிறார்கள். எளிதில் செரிமானம் செய்ய உதவும். எழுப்புகள் உறுதிப்படுத்தவும், சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது.

குழியடிச்சான் அரிசி:

நெல் விதைத்த ஒரு மழை பொழிந்தாள் போதும் குழியடிச்சான் அறுவடை தயாராகி விடும். குழியடிச்சன் அரிசியை குளிக்குளித்தான் அரிசி என்றும் அழைக்கப்படுகிறது. பூங்கார் அரிசிக்கு நிகரான மருத்துவ குணங்கள் உள்ளது.

சுரக்குருவை:

தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டது சுரக்குருவை சிவப்பு அரிசி வகையாகும். எழுப்புகள் உறுதிப்படவும் மூட்டுவலி, முதுகுவலி, கை/கால் அசதி நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறவுதவுகிறது. சர்க்கரை மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

சிவப்புக்கவுனி:

சிவப்பு அரிசி வகைகளில் சிறப்பானது. இதயம் பலப்படுத்தவும், ரத்தக்கொதிப்பை குறைக்கவும் சிவப்புகவுனி பயணப்படுகிறது. மற்ற வகை வெள்ளை அரிசியோடு ஒப்பிடு செய்யும் பொது, இதில் உள்ள சத்துக்கள் அதிகம், இந்த வகை அரிசியை விளையாட்டு வீரர்களுக்கு உடற்பயிற்சி பயிற்சியாளர் பரிந்துரை செய்யப்படுகின்றது.

குறிப்பு: கர்பிணிப் பெண்களுக்கு இந்த சிவப்பு அரிசி உணவுகளை கண்டிப்பாக கொடுக்கக்கூடாது.

குடவாழை அரிசி:

பண்டைய பாரம்பரியமிக்க அரிசி இந்த குடவாழை. தமிழகத்தை தாக்கிய சுனாமி பேரலை காரணமாக டெல்டா, கடற்கரையோர விவசாய நிலங்கள் பாதித்தன. நம்மாழ்வார் அறிவுரைப்படி குடவாழையை அந்த நிலங்களில் பயிரிட்டு. கடல்நீரினால் பதித்த நிலங்களை மீட்டது குடவாழையின் பங்கு முக்கியமானது. நிலத்தை சீர் செய்வதோடு குடலில் உள்ள அசுத்தங்களை நீக்கி சுத்தம் செய்து குடவாழை அரிசி தமிழ் விவசாய குடிமக்களின் மனதிலும் பதிந்தது விட்டது. குடவாழையின் தனி சிறப்பு, புரதசத்து, நார்சத்து, தாதுசத்து மற்றும் உப்புச்சத்து, குடவாழை அரிசியில் அதிகம் உள்ளது, ரத்ததில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து உடலை உற்சாகமாக வைக்க உதவுகிறது.

நவரா அரிசி:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கேரளா மக்களால் விரும்பி பயன்படுத்தப்பட்டு வரும் சிவப்பு அரிசி வகை நவரா அரிசி. ஆயுர்வேத்தில் மூலிகை அரிசி என அறியப்படுகிறது. 

சிறுபிள்ளைகளுக்கு இளம் வயதில் பிடிக்கும் சளியைப் போக்கக்கூடியது. இந்த அரிசிக் கஞ்சி அல்லது சாதத்தை உணவாக குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், சளி முழுமையாகக் குணமடையும். November 2007 இல் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

அறுபதாம் குருவை:

தமிழ் மொழியின் அறுபது + குருவை = 60 நாட்களில் விளையும் குறுகிய கால பயிர் என பொருள்படும். target=”_blank” rel=”noreferrer noopener”>அறுபதாம் குருவை அரிசி சமைத்த பின் மிகவும் மென்மையாக எளிதில் செரிமான செய்ய உதவும். உடலுக்கு உறுதி அளித்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் இதயத்திற்கு வலுசேர்க்கிறது.எலும்புமண்டலத்தை உறுதிப்படுத்த உதவுகிறது. வேலைபளு காரணமாக ஏற்படும் களைப்பை நீக்கி, உடல் புத்துணர்ச்சி பெற உதவுகிறது. முக சுருக்கம், இளமையில் முதுமை தோற்றம் போன்ற வற்றை தினசரி பயன்பாட்டில் குறைக்க உதவும்.

காட்டுயாணம் அரிசி: 

இந்த காட்டுயாணம் அரிசியை மானாவாரி பயிராக பயிரிட்டு அறுவடைக்கு மட்டும் சென்று அறுவடை செய்து வந்தார்கள் நமது மூதாதையர்கள். இதில் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான வைட்டமின், மினெரல், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டசத்துக்கள் இதில் உள்ளது. 

மேலும், பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானம் குறைபாடுகள் வராமல் இருக்க உதவுகிறது. 

குள்ளக்காரர்:

வறட்சி காலத்தில் வளரக்கூடிய தன்மை குள்ளக்கார் அரிசிக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. குள்ளக்கார் நெல், பூச்சி மற்றும் நோய் தொற்றுக்களை எதிர்க்கும் தன்மை கொண்டது. இந்த நெல், பல்வேறு வகையான மண்ணிற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் தன்மை கொண்டது. அதிகப்படியான மழை மற்றும் வறட்சி இரண்டையும் தாங்கும் தன்மை கொண்டது.