அன்றாட பயன்பாட்டில் பயன்படுத்தும் வெள்ளை அரிசி

at-ig

Yogesh Ragupathy

ஜூலை 23 2021


        அன்றாட பயன்பாட்டில் பயன்படுத்தும் வெள்ளை அரிசி

சிவப்பு அரிசி வகையை பற்றி இந்த முந்தைய பகுதியில் பார்த்தோம். இப்போது வெள்ளை அரிசி மற்ற அரிசி வகைகளை இந்த பகுதியில் பார்ப்போம். 

பாரம்பரிய வெள்ளை அரிசி வகைகள்: 

கிச்சிலி சம்பா அரிசி, தூயமல்லி அரிசி, ஆர்கானிக் பச்சை அரிசி (பொங்கல் அரிசி, சிவன் சம்பா, தங்கசம்பா,  சீராகசம்பா அரிசி, பொன்னி அரிசி,  இட்லி அரிசி,  கருடன் சம்பா, பாசுமதி அரிசி.

கிச்சிலி சம்பா அரிசி: 

கிச்சிலி சம்பா அரிசியை கொண்டு அரிசி ஆராய்ச்சி கழகம் உருவாக்கிய அரிசி வகை பல உள்ளது. நமது மூதாதையர்கள் பயன்படுத்திய வெள்ளை அரிசியில் கிச்சிலி சம்பா அரிசி முக்கியமான ஒன்று. குறைந்த சர்க்கரை அளவு (Low Glycemic Index) கொண்ட அரிசி வகை, உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது. 

கிச்சிலி சம்பா அரிசியை கொண்டு பிரியாணி, கலவை சாதவகைகள், பொங்கல் போன்றவகை உணவுகளைச் சமைக்கலாம்.

தூயமல்லி அரிசி:

தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டது “தூயமல்லி அரிசி” வகை, இதன் நெல்மணிகள் விளையும் போது  மல்லிகை மொட்டு போல இருக்கும், அரிசி தூயமல்லி வெள்ளை நிறம் போல இருக்கும், இதன் காரணமாக தான் தூயமல்லி என்று அழைக்கப்படுகிறது. 

நரம்பு மண்டலம் பலப்படுத்த உதவுகிறது. சர்க்கரை நோய் குறைபாடு உள்ளவர்கள் தினசரி பயன்படுத்த ஏற்ற உணவு. சருமம் சுருக்கம் நீக்கி அழகிய சருமம் பெற உதவுகிறது. உடலின் உள்ள உறுப்புகளின் செல்களை புதுப்பித்து உறுப்புகளை இளமையாக வைக்க உதவுகிறது. 

தூயமல்லியை கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகள்: சைவம்/அசைவம் பிரியாணி. தினசரி மத்திய உணவாக. கலவை சாதமாக. புட்டு, இடியப்பம்.

ஆர்கானிக் பச்சை அரிசி (பொங்கல் அரிசி):

புதிதாக அறுவடை செய்த அரிசியைப் பச்சரிசி எனப்படுகிறது. இந்த பச்சரிசியைக் கொண்டு தை மாத பொங்கல் பண்டிகையில் “பொங்கல்” சமைக்கப்படுவதால் இந்த அரிசிக்கு “பொங்கல் அரிசி” என்றும் அழைக்கப்படுகிறது. சைவ உணவு பிரியர்களின் முக்கிய உணவாக இந்த பச்சரிசி உள்ளது. பச்சரிசியில், இயற்கையான சத்துக்கள் அப்படியே உள்ளது. 

பச்சரிசியை கொண்டு பொங்கல், மதிய உணவு வகைகள், புட்டு, இடியப்பம், இட்லி, தோசை, போன்ற உணவுகளைத் தயாரிக்கலாம்.

சிவன் சம்பா:

தமிழக விவசாயிகளால் 500 வருடங்களுக்கு முன்பு வரை பயிரிடப்பட்டது “சிவன் சம்பா” வகையாகும். இதன் அரிசி சம்பா பட்டத்தின் போது விளைவிக்கப்பட்டது. இதன் பெயர்க்காரணம் பற்றி தகவல் எதுவும் கிடைக்கப்படவில்லை. 

இந்த சிவன் சம்பா அரிசியை கொண்டு மதிய உணவு, கலவை சாதம், இட்லி தோசை, போன்ற உணவுகள் தயாரிக்க முடியும். 

சீராகச் சம்பா அரிசி:

சன்ன ரக பாரம்பரிய அரிசி “சீராகச் சம்பா” அரிசி. இந்த சீராகச் சம்பா அரிசியில் தனித்துவமான வாசம் வரும். இதனால் இந்த அரிசியை வாசனை சீராகச் சம்பா அரிசி என்றும் அழைக்கப்படுகிறது. சைவம்/அசைவம் உணவுகளுக்கு ஏற்றது சீராகச் சம்பா அரிசி. 

இந்த சீராகச் சம்பா அரிசியில் செய்யப்படும் நாட்டுக்கோழி பிரியாணி, கிடா கறி பிரியாணி, காய்கறிகள் போட்ட சைவ பிரியாணி. இந்த சுவைமிக்க பிரியாணி மீண்டும் மீண்டும் உண்ணத் தூண்டும்.

பொன்னி அரிசி: 

இன்றைய தென்னிந்திய மக்களின் உணவில் முக்கிய இடம் பிடித்து இருபது பொன்னி அரிசியாகும். காவேரி ஆற்றின் துணை நதியான பொன்னி நதியின் பெயர் கொண்டுள்ளது. அத்தியாவசியமான ஊட்டச் சத்துக்களுடன் உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது. 

பொன்னி அரிசியை கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகள்: சாம்பார் சாதம், புளி சாதம், தக்காளி சாதம், தயிர்ச் சாதம். பிரியாணி போன்ற சுவை மிக்க உணவுகளைத் தயாரிக்கலாம். 

பொன்னி இட்லி அரிசி: 

மென்மையான, மிருதுவான இட்லி சமைக்கப் பயன்படுத்துங்கள் Ulamart பொன்னி இட்லி அரிசி, இட்லி என்பது ஆவியில் வேக வைத்து எடுக்கப்படுவது, இயற்கையான Pro-Biotic கொண்டு உள்ளது. இதில் Pro-Biotic என்பது மாவு புளிக்கும் போது இயற்கையான உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியா உருவாகிறது. 

வளரும் குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சத்துமிக்க உணவு சூடான சுவைமிக்க இட்லி.

கருடன் சம்பா:

தினசரி உணவுக்கான வெள்ளை அரிசியாக பயன்படுத்தப்பட்ட நெல்லில் முதன்மையானது கருடன் சம்பா அரிசி. கருடனின் கழுத்தில் உள்ள வெள்ளை நிறம்போல கருடன் சம்பா நெல்லில் வெள்ளையாக இருக்கும். இதனால் கருடன் சம்பா என்று அழைக்கப்படுகிறது. கடுமையான வறட்சி மற்றும் அதிகப்படியான மழை என இயற்கை சீற்றங்கள் சமாளிக்கும் தன்மை கருடன் சம்பா நெல்லிக்கு உண்டு. 

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. எளிதில் உணவு செரிமானம் செய்ய உதவுகிறது. 

கருடன் சம்பா கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகள்: 

இட்லி, தோசை, சாத வகைகள், புட்டு, இடியப்பம், சிற்றுண்டி வகைகள் தயாரிக்கலாம்.

பாசுமதி அரிசி:

ஆசியாவைப் பூர்விகம் கொண்டது “பாசுமதி அரிசி”, அதாவது இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளில் விளைவிக்கப்படுகிறது. வடமொழியில் “பாசுமதி” என்னும் சொல்லுக்கு வாசனை மிக்கது என்று பொருள் படும். 

ஆசியா மக்களின் உணவில் முக்கியமான தினங்களில் சமைக்கப்படும் உணவு பாசுமதி அரிசி.  பாசுமதி அரிசியை கொண்டு தயாரிக்கப்படும் நாட்டுக்கோழி பிரியாணி, ஆட்டு இறைச்சி பிரியாணி, தம் பிரியாணி, மண்டி பிரியாணி மிகவும் பிரபலமானது.