கொத்தமல்லி சம்பா அரிசி வடிவம் கொத்தமல்லி விதைகளை போல உருண்டை வடிவில் இருப்பதே இதன் சிறப்பாகும். பருவநிலை மாற்றத்தால் வரக்கூடிய வறட்சியை தாங்கி வளரக்கூடிய அரிசி. நீரழிவு, உடல் பருமன், சத்து குறைபாடு போன்ற பலவிதமான பிரச்சனைகளுக்கும் ஒரு அற்புதமான உணவாக இருக்கும் அரிசி. இது எளிமையாக செரிமானம் ஆகக்கூடியது.
உடலில் ஏதாவது காயங்கள் ஏற்படகூடிய நேரங்களில் அந்த இடத்திலிருந்து வெளியேறகூடிய ரத்தத்தை உறையவைக்கக்கூடிய தன்மையை அதிகமாகக்கொண்ட ஒரு அரிசி என்றால் அது கொத்தமல்லி சம்பா அரிசியாகும்.
இந்த பாரம்பரிய அரிசியை மதிய உணவாகவும் பயன்படுத்தலாம்.
கொத்தமல்லி சம்பா அரிசியை நான்கு மணி நேரம் ஊற வைத்து, மூன்று முதல் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து மண் சட்டியில் சிறு தீயில் இருபது நிமிடம் வைத்து சமைக்க சாதம் மலர்ந்து நல்ல நறுமணத்துடன் தயாராகிவிடும்.
கொத்தமல்லி சம்பா இடியப்பம், கொத்தமல்லி சம்பா புட்டு போன்ற உணவுகளையும் தயாரிக்கலாம்.