- Search
- Language
Language
- 0Cart
எங்கள் நோக்கம் மற்றும் இலக்கு:
நாங்கள் புதுச்சேரியில் ஒரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தும் ஐடி தொழில்நுட்ப வல்லுநர்கள். தினசரி பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளால் களைப்படைந்த நாங்கள், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான இயற்கை உணவுப் பொருட்களை எங்கள் நண்பர்கள் வட்டத்தில் பகிரத் தொடங்கினோம். அதன் பிறகு, உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களைக் கவனித்தோம். ஒவ்வொருவரும் ஆரோக்கியமான உணவையும் நல்ல உடல் நலத்தையும் பெறவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
நிறைய பேருக்கு இயற்கை உணவுகளை சுவைக்க விருப்பமுள்ளது, ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, நாங்கள் எங்களின் வட்டத்தை விரிவுப்படுத்தி, பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், அயோடின் சேர்க்காத உப்பு, கைகளால் தயாரிக்கப்பட்டசோப்பு, தூய தேன், செக்கு எண்ணெய், நாட்டுச்சர்க்கரை மற்றும் பிற இயற்கை உணவுகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணி ஒன்றை தொடங்கினோம்.
எங்களின் சிறப்பம்சம் நாம் நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெறும் உணவுப் பொருட்களை, அதன் தன்மை மாற்றாமல், தூய்மையான நிலையில் வாடிக்கையாளர்களுக்கும் / நண்பர்களுக்கும் வழங்குகிறோம். மேலும், எங்கள் சுற்றத்தில் முதலில் தரத்தை பரிசோதித்து பிறகு தான் இணையதளத்தில் விற்பனை செய்கிறோம். இயற்கையின் சுவையை அனுபவிக்க எங்களுடன் இணைந்து, உங்கள் குழந்தை பருவ நினைவுகளுக்கு மீண்டும் செல்லுங்கள்.!
எங்கள் சேவைகள்:
மிக உயர்ந்த தரமான பொருட்கள், சிறந்த வாடிக்கையாளர்களின் சேவை, எளிதான மற்றும் இடையூறற்ற டெலிவரி, 30 நாட்களுக்குள் பணம் திரும்ப பெற உத்தரவாதம்.