வாலன் சம்பா அரிசி: இந்த நெல் ராகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் பல வகையான நோய்கள் குணமாகும் குறிப்பாக குடல் சுத்தமாகும், தேகம் அழகு பெறும், பித்தம் வயிறு சம்பந்தமான நோய்கள், கரப்பான் மந்தவாயு சம்பந்தப்பட்ட நோய்கள் சரியாகும். எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.
பெண்களுக்கு குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற பத்திய உணவு வகைக்கு ஏற்றது.
ஆர்த்ரிடிஸ் எனப்படும் கீல்வாதம், மூட்டுவலி, நாளடைவில் குணப்படுத்தவும், எலும்புகள் உறுதிப்படுத்தவும் வாலான் சம்பா உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி, மனபலம், சீரான ரத்த ஓட்டம் பெருகுவதுடன் மந்தம் தளர்ச்சி முதலியவை நீங்குகிறது.
மேனி பளபளக்கவும், உடல் அழகை மீட்கவும் இந்த அரிசி பெரிதும் உதவுகிறது.
தேவையற்ற கொழுப்பை நீக்கும்.
ஊறவைத்த இந்த வாலான் அரிசியினை பேரீட்சை, பாதாம், முந்திரி, காய்ந்த திராட்சை சேர்த்து உருண்டைகளாக உருட்டி தினம் ஒரு உருண்டை உண்ண சிறந்த ஊட்டச்சத்து உணவாகும்.
வாலான் அரிசியினை மாவாக திரித்து அதில் செய்யும் அதிரசம், அப்பம் போன்ற பலகாரங்களும் நல்ல மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
பருவம் அடைந்த பெண்களுக்கு இந்த அரிசியினால் புட்டு செய்து கொடுத்துவந்தால் அதிக சக்தி கிடைப்பதோடு எலும்புகள் பலம் பெறும்.
வாலான் அரிசியினை சற்று கொரகொரப்பாக அரைத்து அதனுடன் நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து புட்டு செய்தால் சுவையாக இருக்கும்.