Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Buy 5 kg, Get 5% OFF
KG:0.5 KG
தூயமல்லி பெயர்க்காரணம், கதிர் வரும் சமயத்தில் பார்ப்பதற்கு மல்லிகை மொட்டு போல் இருக்கும். இதனால் தூயமல்லி என கூறப்படுகிறது. பூச்சிக்கொல்லி உபயோகப்படுத்தாத ஒரே அரிசி வகை இதுவாகும். இதுவும் தமிழர்களின் பாரம்பரிய அரிசி வகை ஆகும்.
தனி சிறப்புகள்:
உடல் உள் உறுப்புகள் வலுவடையும்.
ஆர்கானிக் தூயமல்லி
தூயமல்லி கதிர் வரும் சமயத்தில் பார்ப்பதற்கு மல்லிகை மொட்டு போல் இருப்பதால், இந்த நெல்லின் பெயர் தூயமல்லி ஆகும், பூச்சிகளின் தாக்குதல் எதிராக வளரும் வகை நெல் ஆகும், சராசரியாக 130-140 நாட்களுக்குள் வளரும், மேலும் இது ஒரு தமிழர் பாரம்பரிய வகை நெல்லாகும், இன்று நம் அரிசி உணவில் polish எனப்படும் பட்டை தீட்டப்பட்ட (சத்துக்களற்ற வெறும் சக்கை அரிசி) உணவாக உட்கொள்கின்றோம், தூயமல்லி அரிசி மணிகள் பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும், நம் முன்னோர் வழியில், இன்றும் பலர் தூயமல்லி சாகுபடி செய்கின்றனர், சேலம் மாவட்டம் கல்பகனுர் கிராமத்தில் தூயமல்லி சாகுபடி சிறப்பாக செய்கின்றனர்,
உணவே மருந்து, மருந்தே உணவு என்பது நம் முன்னோர் கூற்று.
தூயமல்லியில் சத்துக்கள், மருத்துவ குணங்கள் சற்றே சிறப்பாக உள்ளது, நம் பாரம்பரிய உணவினை உட்கொள்வோம், வளமான ஆரோக்கியம் பெறுவோம்,
No reviews yet. Be the first to share your experience!