உலமார்ட் வழங்கும் பொருட்கள் தவறானதாகவோ அல்லது சேதமடைந்திருந்தாலோ திருப்பித் தரல் (ரிட்டர்ன்) அனுமதிக்கப்படும்.
பொருள் கிடைத்த பிறகு, 24 மணி நேரத்திற்குள் தவறான அல்லது சேதமடைந்த பொருட்கள் பற்றிய புகார்களை எங்களிடம் தெரிவிக்க வேண்டும்.
புகார் அனுப்பும் போது, புகைப்படம் அல்லது முழுமையான பார்சலைத் திறக்கும் காணொளி (Unboxing Video) வீடியோ கொண்டிருப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
பார்சல் திறப்பதிலிருந்து ஒவ்வொரு பொருளையும் காண்பிக்கும் வரை தொடங்கி முழுமையான வீடியோ எடுக்க வேண்டும்.
பொறுமையாக கையாள வேண்டிய பொருட்களுக்கு (Fragile Items) அன்பாக்ஸிங் வீடியோ கட்டாயம்.
உலமார்ட் உதவிக்குழு ரிட்டர்ன் கொள்கையை சரிபார்த்து, பொருட்களைத் திரும்பத் தரும் முறையின் வழிகாட்டுதலை அளிக்கும்.
உதவிக்குழு சரிபார்த்தப் பின், 2 நாட்களுக்குள் சரியானப் பொருட்கள் திருப்பி அனுப்பப்படும்.
திரும்ப அனுப்பும் பொருட்களுக்கு செலுத்திய கொரியர் கட்டணம் (Courier Charges) திரும்ப வழங்கப்படும்.
பில் (Receipt) மற்றும் செலுத்திய தொகை தெளிவாகக் காண்பிக்கும் ஆதாரம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
திருப்பித் தரப்பட்ட பொருட்கள் எங்களிடம் கிடைத்து, சரிபார்க்கப்பட்ட பிறகே பணம் திருப்பி வழங்கப்படும் அல்லது வவுச்சர் (Cash Back Voucher) வழங்கப்படும்.