சிவப்பு அரசி வகையை சார்ந்தது இந்த ரத்தசாலி அரிசி. இந்த பாரம்பரிய அரிசயானது 3000 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. இது ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் திறன் கொண்டது. இந்த அரிசி பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த உணவாக
பரிந்துரைக்கப்படுகிறது.
ரத்தசாலி அரிசி ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் திறன் கொண்டது, இதனால் ரத்தசோகை நோயிலிருந்து காக்க உதவுகிறது மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த மாற்றாக இருக்கும். இது ரத்த ஓட்டத்தை சீர் செய்வதால் நாளடைவில் ரத்த கொதிப்பை (Low BP மற்றும் High BP) கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
ரத்தசாலி அரிசியில் நார்சத்து நிறைந்துள்ளது. உடல் எடை குறைப்புக்கு இது சிறந்த உணவாகும் மற்றும் மலசிக்கல் நோயிலிருந்து விடுபட இது உதவுகிறது. உணவு செரிமானம் எளிதாகிறது.
ரத்தசாலி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவை தின்தோறும் ஒருமுறை உட்கொண்டால், குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
ரத்தசோகை குறைபாடு உள்ள குழந்தைகள், பெண்கள் அன்றாடம் பயன்படுத்த வேண்டிய உணவு பட்டியலில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று ரத்தசாலி அரிசி.
வடக்கு கேரளம், தெற்கு கர்நாடகம், தமிழகத்தின் ஒரு சில பகுதி மக்கள் தங்களின் பெண் குழந்தைகள் மஞ்சள் நீர் காலங்களில் ரத்தசாலி அரிசியை கொண்டு புட்டு, பத்திய உணவுகள் பெண் குழந்தைகளுக்கு வழங்குவது இன்றளவும் மரபாக உள்ளது.