கருப்பு நிற மேலுறையோடு உவர் நிலங்களில் செழித்து வளர்வதாலும் இப்பெயர் பெற்றது. இது புத்த காலமான கி. மு. ஆறாம் நூற்றாண்டு முதலே சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ளதாக கருதப்படுகிறது. இது சாத்வீக குணத்தை ஏற்படுத்த கூடிய அரிசியாகும். வைட்டமின் சத்து குறைபாடுகளுக்கு ஏற்ற அரிசி.
குறைந்த ரத்த அழுத்தம், நீர் சத்து குறைதல், பக்கவாதம், சோர்வு, குழந்தையின்மை, ரத்த சோகை, மூளை வளர்ச்சி போன்ற பல விதமான பிரச்சனைகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
ரத்தத்தின் பிஎச் அளவை சீராக வைத்து கொள்ளும் தன்மை இந்த அரிசிக்கு உள்ளது.
குழந்தைகளுக்கு இந்த காலா நமக் அரிசி உணவை அளிக்க சீரான மூளை வளர்ச்சி அடையும், அறிவு திறன் மேம்படும். மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்த உதவும்
காலா நமக் அரிசியினை அன்றாட உணவிற்கு பயன்படுத்தலாம்.
கலவை சாதம், பிரியாணி, புலாவ், போன்ற அணைத்து வித உணவிற்கும் ஏற்றது.