Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Buy 5 kg, Get 5% OFF
KG:0.5 KG
பூங்கார் கைகுத்தல் அரிசி: இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, பெண்களுக்கான பிரத்யேக அரிசி. கர்ப்பிணிகளுக்கு தொடர்ந்து இந்த அரிசியில் கஞ்சி வைத்துக் கொடுத்துவர, சுகப்பிரசவத்துக்கு உதவும். எலும்புகளை வலுப்படுத்தும்.இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற பாரம்பரிய அரிசியை காட்டிலும், இதில் தனிம சத்துக்கள் அதிகம் உள்ளது, சீலியாயிக், சர்க்கரை ஆகிய நோயின் தாக்கத்தை குறைக்கவல்லது, உடலில் உள்ள கொழுப்பினை குறைக்க வல்லது, ரத்தத்தில் ஹீனமோக்ளோபின் அளவினை அதிகரிக்க உதவும் மேலும் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
இந்த வகை அரிசியை கொண்டு இட்லி செய்ய மென்மையான இருக்கும், மேலும் தோசை, சாத வகைகள் செய்யலாம்.
தனி சிறப்புகள்:
கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் அதிக அளவில் ஊறும்
பூப்பெய்தும் காலங்களில் இந்த அரிசியில் புட்டு செய்து சாப்பிட்டுவர, இடுப்பு, வயிறு, கால் வலி நீங்கும்.
பூங்கார் ஆர்கானிக் தீட்டப்படாத அரிசி
இந்த வகை அரிசியை மற்ற அரிசியோடு ஒப்பிடும்போது, இரும்பு, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் அதிக அளவில் உள்ளது. இது ஒரு அபாரமான சுவையை பெற்றுள்ளது.
அரிசியின் சிவப்பு நிறத்திற்கு, இதனுள் உள்ள அந்தோ சின்னானின் காரணமாகும், மேலும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால், நமது உடலில் பிரீ ராடிசல்ஸ் ஏற்படும் பாதிப்பினை போக்கவல்லது.
கைகுத்தல் மூலமாக உமி நீக்கப்படுகிறது, இந்த முறையில், எவ்வகையான இயந்திரங்களின் பங்கும் அற்றது, இதனால் இதன் பெயர் பூங்கார் கைக்குத்தல் அரிசி என படுகிறது.
பாரம்பரிய உணவுகளை உட்கொண்டதை முற்றிலும் நிறுத்திவிட்டதால், நமது மனித உடலானது அனைத்து ஆபத்தான நோய்க்களுக்கும் கதவினை திறகின்றது.
இது மாற்றுதிக்கான நேரம், பாரம்பரிய அரிசி வகைகள் சுவைப்போம், ஆரோக்கியமான வாழக்கை பெறுவோம்.
கனிமசத்துக்கள்: இரும்பு, துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் உள்ளது
பெண்களுக்கான ஹார்மோன்-சுரப்பி துண்டவல்லது, உடலுறுதி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மர்களுக்கு ஏற்ற உணவாகும், கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் இந்த வகை அரிசியை உட்கொள்ளும்போது, சுகப்பிரசவம் ஆகும் என நம்முன்னோரின் அனுபவமாகும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மர்களுக்கு கஞ்சியாக இந்த உணவினை தருவார்கள், மேலும் வயிறு உபாதைகள், மற்றும் குடல்புண் (அல்சர்) உகந்த உணவாகும்.
No reviews yet. Be the first to share your experience!