Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

மட்டை அரிசி
KG:0.5 KG
மட்டை அரிசி, பாலக்காடு மக்களின் அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. பண்டைய மன்னர்களான சேரர்கள், சோழர்களின் அரச விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கிறது. அதன் தனித்துவமான சுவை காரணமாக வரலாற்று புகழ் பெற்றது. இது இளஞ்சிவப்பு நிறத்துடன், வெளிப்புறம் சிவந்த நிறக்கோடுகளுடன் காணப்படுகிறது. திருக்குறள் போன்ற சங்க இலக்கியங்களிலும் இந்த அரிசி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் கேரளம், கர்நாடக, மற்றும் தென் இந்திய மக்களின் பயன்பாட்டில் உள்ள மட்டை அரிசியை தென்னிந்திய விவசாயிகளால் விளைவிக்கப்படுகிறது.
மட்டை அரிசி
இன்றும் கேரளா மக்களால் அதிகம் உண்ணப்படும் அரிசி ஆகும். இயற்கையிலேயே இந்த நெற்பயிரில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் பூச்சி மருந்துகள் அடிக்க வேண்டியதில்லை. அதிக நீர் இல்லாமல் விளைவதால் இதனை புழுதிப்புரட்டி என்றும் அழைப்பார்கள். இங்கிலாந்து பல்கலைக்கழகம் இந்த அரிசியை ஆய்வு செய்தனர். இது உடலுக்கு நல்லது எனவும், தமிழகத்தின் தென்மாவட்ட மக்கள் இந்த அரிசியினால் நீண்ட பலத்துடன் வாழ்ந்தார்கள் எனவும், இந்த மட்டை அரிசியை அன்றாட உணவில் எடுத்துக்கொள்வதால் சர்க்கரை நோய் நெருங்காது என ஆய்வில் தெரிவித்தனர். இதை செந்நெல் எனவும் குறிப்பிடப்படுவதுண்டு.
குறிப்பு: கேரளா மட்டை அரிசி புவிசார் குறியீடு எனப்படும் ஜி.ஐ tag பெற்றவுள்ளது.
No reviews yet. Be the first to share your experience!