Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

கொள்ளு
KG:0.5 KG
பல வகையான சிறு தானியங்கள் விளைவிக்கப்பட்டு குறிப்பாக தென்னிந்திய மக்களால் உண்ணப்படுகின்றன. அதில் பிரபலமான ஒரு சிறு தானியம் கொள்ளு. "கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு" என்ற பழமொழிக்கேற்ப இதன் சிறப்பை உணரலாம். இது தட்டையாக பழுப்பு நிறத்தில் இருக்கும். கொள்ளில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. கொள்ளு ஒரு குறைந்த கலோரி தானியம். இதனை குறைந்த அளவு எடுத்து கொள்வதால் அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. தினசரி உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், கொள்ளை அன்றாட உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடை குறையும் என்பது உண்மையே. மேலும் உடல் பருமனை குறைப்பதற்கு இது பெரும் பங்கு வகிக்கிறது. கால்சியம், புரதம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவு பொருள். உடலை வலுவாக வைத்திருக்கும். ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
கொள்ளு
கொள்ளு சக்தி வாய்ந்த பக்க விளைவு இல்லாத ஒரு தானியம். இது உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. வயிறு தொடர்பான கோளாறுகளை போக்கவும் கொள்ளை பயன்படுத்தலாம். இது கெட்டகொழுப்பை எளிதில் நீக்கும் மற்றும் கொழுப்பு உணவுகளை குறைக்கும் போது ஏற்படும் ஆற்றல் குறைபாட்டை ஈடுகட்ட உதவும். இதில் வேறு பல ஆரோக்கிய நன்மைகளும் உண்டு. எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு.
No reviews yet. Be the first to share your experience!