தமிழகத்தின் பத்து பாரம்பரிய அரிசியும் அதன் தனி சிறப்பும் (Top Traditional Rice of Tamilnadu)

at-ig

Yogesh Ragupathy

ஆக 12 2019


        தமிழகத்தின் பத்து பாரம்பரிய அரிசியும் அதன் தனி சிறப்பும் (Top Traditional Rice of Tamilnadu)

earthen-pot-cooking

1. அரிசியின் பெயர் : கருப்பு கவுனி அரிசி

பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்த வகை அரிசியை “அரச உணவு” என்றும் “பேரரசர் உணவு” என்றும் கூறுவர், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்(Anti-Oxidants) மட்டும் நார்சத்து(Fiber), புற்று நோய், சர்க்கரை குறைபாடு குறைகின்றது, மேலும் கல்லிரல் உள்ள பாதிப்புகளை குறைகின்றது. கருப்பு கவுணி கொண்டு பல்வேறு வகையான உணவு வகைகள் சமைக்கலாம், அதில் தோசை, புட்டு, தேங்காய் மற்றும் மாம்பழ சேர்த்து கொழுக்கட்டை, கருப்பு கவுணி சாதம் உடன் காய்கறிகள் சாம்பார்/குழம்பு வகைகள் சாப்பிடலாம்.

வேறு பெயர்கள்     : கருப்பு கவுனி அரிசி | கருப்பு அரிசி | கவுனி அரிசி | Black Rice | Black Arisi | Manipuri – Chak-Hao |

விளைவிக்க தேவையான காலம்:  175-190 நாட்கள் 

மருத்துவ குணங்கள் 

  • கருப்பு கவுனி அரிசி வகையில் உயர்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் கொண்டுள்ளது. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மனித உடலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரீ-றடிக்கல்ஸ் எதிரானது.
  • கருப்பு கவுனி அரிசி வீக்கத்தை குறைக்கிறது.
  • அடிப்படையில் கருப்பு அரிசி பயன்பாடு, ஆஸ்த்துமாவின் தக்கதைக் குறைக்கிறது
  • கருப்பு கவுனி அரிசி, கல்லிரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்
  • கருப்பு கவுனி அரிசி, நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது.
  • கருப்பு கவுனி அரிசி, ரத்த ஓட்டத்தை சீராக்கும், இதய atherosclerosis சுவரின் கொழுப்பு படிவங்களை குறைகின்றது, மேலும் மாரடைப்பிலிருந்து காக்கிறது.
  • கருப்பு கவுனி அரிசி, முற்றிலும் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துகிறது
  • கருப்பு கவுனி அரிசி, கொழுப்பை குறைக்கிறது (LDL- கெட்ட கொழுப்பு இது)
  • கருப்பு கவுனி அரிசி, புற்றுநோயை தடுக்க உதவுகிறது
  • கருப்பு கவுனி அரிசி, செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது
  • கருப்பு கவுனி அரிசி, முடி வளர்ச்சி அதிகரிக்கிறது மற்றும் கண் பார்வை அதிகரிக்கிறது.


சமையல் குறிப்புகள்:

  • இட்லி
  • தோசை
  • கஞ்சி
  • செட்டிநாடு இனிப்பு வகைகள்,
  • மதிய உண்ணும் சாத வகைகள் 

BUY Karuppu Kavuni Rice online : 

2. அரிசியின் பெயர் : மாப்பிள்ளை சம்பா

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில்ஒன்றாகும், இதில் மினரல்ஸ் (தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள்) உயிர்ச்சத்து, புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. பண்டையக் காலத்திலிருந்து இந்த வகையான உணவினை புது மாப்பிள்ளை அல்லது மணமகனுக்கு அளிப்பார்கள், இந்த உணவை உட்கொண்ட சில நாட்களில் மணமகன், இளவட்ட கல்லினை தூக்கி காட்டவேண்டும். இந்த உணவு, நோய்  எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இந்த ரக அரிசி கொண்டு இட்லி, தோசை, சாதம், பேன் கேக் செய்யலாம்.

வேறு பெயர்கள் :  மாப்பிள்ளை சம்பா | மாபிள்ளை சம்பா | Bride Groom Rice | 

விளைவிக்க தேவையான காலம்:  155-160 நாட்கள் 

மருத்துவ குணங்கள்: 

  • இரும்புசத்து(Iron) மற்றும் துத்தநாக(Zinc) சக்தி கொண்டது.
  • ஹீமோகுளோபின் மற்றும் மையோகுளோபின் உற்பத்தி செய்ய உதவுகின்றது.
  • தசைகள் மற்றும் திசுக்கள்ளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் புரத சத்ததை சேர்க்க உதவுகின்றது.
  • பூநிலம் (Pro-Anthocyanins) கொண்டுள்ளதால் அதிகளவு சக்கரை(High BP Hyperglycemia) மற்றும் ரத்தத்தை சுத்தரிக்கிறது.
  • உடலின் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க கூடியது. இதில்,  தனிமம், Iron, Zinc, Manganese, பாஸ்பரஸ், molybdenum, magnesium. 
  • இதில் உள்ள நார்சத்து, செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் இதயம் சம்மந்தமான கோளாறு வராமல் தடுக்கின்றது.
  • Celiac குடல் கட்டிகள் வராமல் தடுக்கின்றதது. குளுட்டோன்(Glutton) போல் இருப்பதால் குடும்ப வழிவகை நோய் வராமல் இருக்கும்.
  • ஹீமோகுளோபின் அதிக படுத்துகின்றது. நுண்ணீய ஊட்டச்சத்து அதிகளவில் கொண்டுள்ளது வைட்டமின் B1 உள்ளதால் வயிறு மற்றும் வயிற்றுப்புண் சம்மந்தமான குறைபாடுகளை களைகிறது.
  • தாம்பத்ய குறைபாடுகளை போக்குகின்றது. நரம்பு மண்டலம், ரத்த மண்டலம், தசை மண்டலம் மேம்படுகின்றது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் இதய துடிப்பினை எந்தநேரமும் நிறுத்த வாய்ப்புள்ளது இந்த உணவில் அவை அனைத்தும் குறையும்.

தாம்பத்ய குறைபாடுகளை போக்குகின்றது. நரம்பு மண்டலம், ரத்த மண்டலம், தசை மண்டலம் மேம்படுகின்றது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் இதய துடிப்பினை எந்தநேரமும் நிறுத்த வாய்ப்புள்ளது இந்த உணவில் அவை அனைத்தும் குறையும்

சமையல் குறிப்புகள்:

  • இட்லி, 
  • தோசை
  • கஞ்சி
  • மதிய உண்ணும் சாத வகைகள் 

BUY Bridegroom Rice online : 

3. பூங்கார் கைகுத்தல் அரிசி:

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக  பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற பாரம்பரிய அரிசியை காட்டிலும், இதில் தனிம சத்துக்கள் அதிகம் உள்ளது, சீலியாயிக்,சர்க்கரை ஆகிய நோயின் தாக்கத்தை குறைக்கவல்லது, உடலில் உள்ள கொழுப்பினை குறைக்க வல்லது, ரத்தத்தில் ஹீனமோக்ளோபின் அளவினை அதிகரிக்க உதவும் மேலும்  உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

வேறு பெயர்கள் : பூங்கார் அரிசி | பூங்கார் Rice | பூங்கார் கை குத்தல் அரிசி | 

விளைவிக்க தேவையான காலம்:  110-120 நாட்கள் 

மருத்துவ குணங்கள்:

  • ரத்தத்தில் ஹீனமோக்ளோபின் அதிகரிக்க உதவும்
  • இந்த உணவினை பழையசோறு அல்லது நீராகாரம் உட்கொள்ளும் போது, நமக்கு தேவையான வைட்டமின் B  கிடைக்கிறது.பக்கவாத நோய்க்கு எதிரானது, (வரும் முன் அல்லது வந்த பின் பாதுகாக்கின்றது)
  • நுண்ணூட்ட வளம்(micronutrients) உள்ளதால், நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கப்பெறுகிறது.
  • பரம்பரை நோயின் தாக்கம் மற்றும் celiac diseases நமது உடலில் இருந்து குறைக்க அல்லது வராமல் செய்ய உதவும்
  • இந்த உணவின் 50கிராம் அளவீடின்படி, 3கிராம் நார்சத்து, 48கிராம் கார்போஹைட்ரெட்ஸ், 8 விழுக்காடு புரதசத்து உள்ளது.
  • இந்த உணவின் முக்கியத்துவமாக பார்க்க வேண்டியவையில் ஒன்று உணவு உட்கொண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவினை அதிகப்படுத்தாமல் பார்த்துக்கொள்கிறது, மேலும் வியர்வை சுரப்பிகளை தூண்டுவதால் வியர்வை வெளியேற்றம் நடக்கிறது
  • கர்ப்பகாலத்தில் இந்த உணவினை உட்கொள்ளுவதால், ஆரோக்கியமான குழந்தை பேறு பெறுகிறார்கள்.
  • ரத்தனங்களின் உள்ள கொழுத்தடைகளை நீக்க வல்லது, மேலும் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது
  • உடற்பருமன் குறைக்கும், தேவையான நேரத்தில் பசி எடுக்கும்

சமையல் குறிப்புகள்:

  • இட்லி, 
  • தோசை
  • மதிய உண்ணும் சாத வகைகள் 

BUY Organic Poongar Rice online : 

4. காட்டுயாணம்:

இது பண்டைய தமிழர் பயன்படுத்திய அரிசி வகையாகும். இது மானாவாரி பயிராகும், காட்டில் வாழும் யானையின் உடலின் எடையை தாங்கும் கால்கள் போல, வலிமையான எலும்புகள் பெற உதவும்.

விதைத்தபின் அறுவடைக்கு மட்டும் சென்று அறுவடை செய்து வந்தார்கள் நம் முன்னோர்கள். சர்க்கரை நோய், மலச்சிக்கல், புற்றுநோய்க்கு எதிரானது.

வேறு பெயர்கள் : காட்டுயாணம் அரிசி | காட்டுயானம் அரிசி | Kattuyanam Rice | Katuyanam Rice| 

விளைவிக்க தேவையான காலம்:  125-130 நாட்கள் 

மருத்துவ குணங்கள் 

  • கால்சியம் சத்துக்கள் உள்ளதால் எலுமண்டலத்திற்கு தேவையை பூர்த்தி செய்ய  உதவும். 
  • சர்க்கரை நோயின் தாக்கத்தை  குறைக்க உதவும்.
  • அனைத்து வகையான புற்று நோய்யாளிகளுக்கு ஏற்ற உணவாகும்.
  • 30 வயது முதல் பெண்களுக்க ஏற்படும் Low bone density குறைபாட்டினை போக்கவல்லது.
  • தேவையற்ற கெட்ட கொழுப்பினை குறைக்க உதவும்.
  • குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் அரிசி வகையாகும் .
  • Antioxidants அதிக அளவில் உள்ளது .

சமையல் குறிப்பு:

  • இட்லி
  • தோசை
  • சாதவகைகள
  • அடை வகைகள் 

BUY Organic Kattuyanam Rice online : 

5. மூங்கில் அரிசி:

உறுதியான எலும்புகள் பெற உதவும். மூட்டுவலி, முதுகு வலி, முழங்காலில் ஏற்படும் வலிகள் அறவே குறையும். மூங்கில் அரிசி, இதன் சுவை கோதுமை போல் இருக்கும்.

வேறு பெயர்கள் : மூங்கில் அரிசி | Bamboo Rice | 

விளைவிக்க தேவையான காலம்:  30 முதல் 40 ஆண்டுகள்

மருத்துவ குணங்கள் 

  • மூங்கில் அரிசியில் Low Glycemic Index காரணமாக, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும்
  • உடலிற்கு தேவையான சத்துக்களை பெற உதவும். வைட்டமின் B6, பாஸ்பரஸ், கால்சியம் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது
  • தினசரி பயன்பாட்டில், வாத நோய், மூட்டு வலி, முதுகு தண்டுவட வலி நாளடைவில் குறையும்உடலின் தேவையற்ற கொழுப்பினை குறைக்கும்
  • சமைக்கும் முன், 12 மணி நேரம் முன்பாக தண்ணீரில் ஊறவைக்க வேண்டும், அல்லது pressure cooker 6 முதல் 8 விசில் பிறகு பயன்படுத்துவும்.

சமையல் குறிப்பு:

  • இட்லி,
  • தோசை,
  • பொங்கல்,
  • கிச்சிடி,
  • பிரியாணி 

BUY Bamboo / Moongil Rice online

6. கிச்சிலி சம்பா அரிசி:

இந்த அரிசி (DNA) வகையை கொண்டுதான் இந்தியாவின் அரிசி ஆராய்ச்சி கழகம் பல அரிசி வகையை (IR varieties) உருவாக்கியுள்ளது.

எளிதாக செரிமானம் ஆகிறது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வலுவாக்கும் தசைகள் மற்றும் தோலில் பளபளப்பு உண்டாகிறது. சக்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும். இதனை கொண்டு பிரியாணி, இனிப்பு வகைகள், சாத வகைகள் மற்றும் கொழுகாட்டை செய்ய பயன்படுகின்றது.

வேறு பெயர்கள் : கிச்சிலி சம்பா அரிசி | Kichili Rice | 

விளைவிக்க தேவையான காலம்:  140 நாட்கள்

மருத்துவ குணங்கள் 

  • எளிய முறையில் செரிமானம் ஆகிறது
  • சர்க்கரை குறைந்த அளவில் உள்ள உணவு(glycemic index value of ) உடல் மற்றும் தசைகளின் பலப்படுகின்றது
  • பளப்பளபான மேனிக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மேலும் பல்வேறு நோய்களுக்கு ஏதிரானது

சமையல் குறிப்பு:

  • இட்லி,
  • தோசை,
  • பொங்கல்,
  • கிச்சிடி,
  • பிரியாணி 

BUY கிச்சிலி சம்பா அரிசி / Kichili Samba Rice / Kichidi Samba online

7. தூயமல்லி அரிசி:

தூயமல்லி பெயர்க்காரணம், கதிர் வரும் சமயத்தில் பார்ப்பதற்கு மல்லிகை மொட்டு போல் இருக்கும். இதனால் தூயமல்லி என கூறப்படுகிறது. பூச்சிக்கொல்லி தேவையற்ற அரிசி வகை இதுவாகும். இதுவும் தமிழர்களின் பாரம்பரிய அரிசி வகை ஆகும்.

வேறு பெயர்கள் : தூயமல்லி அரிசி | Thuyamalli Rice | Thooyamali Rice | 

மருத்துவகுணங்கள்:

  • இந்த அரிசி நரம்பு மண்டலத்தை காக்கிறது
  • சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு ஆகும்
  • எளிய முறையில் சமைக்கவும் மற்றும் செரிமான கோளாறு அற்ற ஒன்றாகும்
  • சரும சுருக்கம் குறைக்கிறது, மற்றும் ஆரோக்கியம் மேம்படும்
  • உடல் வளர்ச்சிக்கு மற்றும் மனவளர்ச்சிக்கு மேம்படும்.
  • உடலில் உள்ள உள் உறுப்புகளின் இளமை காக்கின்றது

BUY Thuyamalli / Thooyamali Rice / தூயமல்லி அரிசி online

8. சீராக சம்பா:

அழகான  உடல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். இதில் அடங்கியுள்ள பைடோநியூட்ரியண்ட்ஸ்(phytonutrients), பல்வேறு நோய்க்களுக்கு ஏதிராக செயல் புரியும், பார்ப்பதற்கு சீரகம் போல் இருப்பதால், இதன் பெயர் சீரக சம்பா எனப்படுகிறது

இந்த அரிசி ரகம், புற்றுநோய் எதிரானது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க வல்லது, இதயம் சீராக்க பயன்படுகிறது மற்றும் மலச்சிக்கல் செரிமான கோளாறு சீரகும்.  இந்த ரகம் அரிசி தமிழர் பாரம்பரியம் அரிசியாகும், இங்கு உள்ள அரிசி ரகத்தில் சற்று விலை உயர்ந்த ரகமாகும், இதன் ருசியானது தனித்துவமானது. இந்த ரக நெல் சற்றே கடினமாக இருக்கும், ஆனால் சமைக்கும் போது மிகவும் மென்மையாக இருக்கும்.

வேறு பெயர்கள் : சீராக சம்பா | Seeraga Samba Rice | Jeera Rice | 

விளைவிக்க தேவையான காலம்:  135 to 140 நாட்கள் 

மருத்துவ குணங்கள்:

  • இந்த அரிசி நரம்பு மண்டலத்தை காக்கிறது
  • சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு ஆகும்
  • எளிய முறையில் சமைக்கவும் மற்றும் செரிமான கோளாறு அற்ற ஒன்றாகும்
  • சரும சுருக்கம் குறைக்கிறது, மற்றும் ஆரோக்கியம் மேம்படும்
  • உடல் வளர்ச்சிக்கு மற்றும் மனவளர்ச்சிக்கு மேம்படும்.
  • உடலில் உள்ள உள் உறுப்புகளின் இளமை காக்கின்றது

சமையல் குறிப்பு:

  • இட்லி,
  • தோசை,
  • பொங்கல்,
  • சைவம் -அசைவம் பிரியாணி வகைகள் 

BUY Seeraga Samba / சீரகச் சம்பா Rice online

9. கருடன் சம்பா :

கருடன் சம்பா அல்லது காடைகுழந்தான் நெல். தமிழர்களின் பாரம்பரிய நெல் வகைகலில் இதுவும் ஒன்று தமிழ் மக்கள் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கும் முதன்மையான நெல் வகைகளில் இதுவும் ஒன்று. கருடன் கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை நிறம் காணப்படுவதால், இவ்வகை நெல்லுக்கு அப்பெயர் பெற்றதாக கருதப்படுகிறது.

வேறு பெயர்கள் : கருடன் சம்பா  | Garudan Rice | Karudan Rice | 

விளைவிக்க தேவையான காலம்:  160 to 165 நாட்கள் 

மருத்துவ குணங்கள் 

  • நோய் எதிர்ப்பு சக்தி ஏற்றது.
  • ஆரோக்கியமான உணவு/சாப்பாடு மற்றும் சிற்றுண்டி ஏற்றது.
  • பசையம் மிக குறைவான உள்ள அரிசி வகைகளில் இதுவும் ஒன்று மேலும் உடல் வலிமையாக்க உதவும்.
  • சிறுநீர் தொற்று எனப்படும் urinarytrackinfection உபாதைகளை சீர் செய்ய உதவும், உடல் கட்டிகளை (Body Tumors) குணமாக்க உதவும்.
  • ரத்த சோகை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாககும்.

சமையல் குறிப்பு:

  • இட்லி,
  • தோசை,
  • பொங்கல்,
  • பிரியாணி 

BUY Karudan / Garudan Rice online

10. குடவாழை

தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும்.  இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரும், கடலோரப் பகுதியில் உள்ள நிலத்தில், கடல் நீர் உட்புகும் நிலத்தில் சாகுபடி செய்ய ஏற்ற இரகம் இதுவாகும். தமிழகத்தின்   நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதியில் உள்ள விவசாயிகள் குடவாழை நெல் பயிர் சாகுபடி செய்கின்றனர். இந்தப் பாரம்பரிய நெல் வகைகளைச் சாகுபடி செய்யும் வழக்கம், இன்றளவும்  வேதாரண்யம் உழவர்களிடம் உள்ளது. மூப்படைந்த நிலையில் இந்நேல்லின் கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்ததுபோல் காணப்படும்.

பார்ப்பதற்கு நெல் மணிகள் சிகப்பு நிறமாக இருக்கும். அரிசி சிகப்பு நிறத்தில் இருக்கும்.

குடவாழை மருத்துவ பயன்கள்:

  • பலமான உடல்  மற்றும் பளபளப்பான தேக அமைப்பு உண்டாகும்
  • செரிமான கோளாறு நீங்கும்.
  • தோல் வியாதியை நீங்கும்.
  • சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.
  • குடல் சுத்தமாகும் மற்றும் வயிறு பிரச்னை குணமாகும்.
  • மலச்சிக்கல் கோளாறு நீங்கும்.
  • புரதசத்து, நார்சத்து, தாதுசத்து மற்றும் உப்புச்சத்து,  குடவா அரிசியில் அதிகம் உள்ளது, ரத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து உடலை உற்சாகமாக வைக்க உதவுகிறது

சமையல் குறிப்பு:

  • இட்லி,
  • தோசை,
  • பொங்கல்,
  • பிரியாணி