மண் பானையில் சமைப்பதன் நன்மைகள்: உங்கள் சமையலறைக்கு ஏன் மண் பாத்திரம் அவசியம்?

at-ig

Abarna Manikandan

Jun 13 2026


        மண் பானையில் சமைப்பதன் நன்மைகள்: உங்கள் சமையலறைக்கு ஏன் மண் பாத்திரம் அவசியம்?

ஒரு தலைமுறையின் சமையல் ரகசியம்

நம் தாத்தா பாட்டி வீட்டில் அடுப்படியில் எப்போதுமே மண் பானை இருக்கும். அதில் சமைத்த சாம்பார், ரசம், கஞ்சி எல்லாம் ஒரு தனி சுவையோடு இருக்கும். அந்த சுவைக்கு காரணம் என்னவென்று தெரியாமலேயே நாம் ரசித்திருக்கிறோம். ஆனால் இன்று அந்த சமையல் முறை மீண்டும் பேசப்படுகிறது. காரணம் சுவை மட்டுமல்ல, ஆரோக்கியமும்தான்.

நவீன வாழ்க்கைப் பாணியில் நாம் அலுமினியம், ஸ்டீல், நான்-ஸ்டிக் பாத்திரங்களை நோக்கி நகர்ந்தோம். ஆனால் அந்த மாற்றம் நமது உடல் நலத்தை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என்று இப்போது அதிகமான மக்கள் யோசிக்கிறார்கள். மண் பாத்திரம் திரும்பி வருவது ஒரு ஃபேஷன் அல்ல, அது ஒரு ஆரோக்கிய தேர்வு.

மண் பாத்திரம் சமையலில் என்ன நடக்கிறது?

மண் பாத்திரத்தில் சமைக்கும் போது நடைபெறும் செயல்முறை வேறு எந்த பாத்திரத்திலும் நடைபெறுவதில்லை. மண்ணின் இயற்கையான துளைகள் வழியாக நீராவி சுழலும், வெப்பம் சீராக பரவும், உணவின் ஈரப்பதம் கட்டுப்படும். இவை எல்லாம் சேர்ந்து உணவின் சுவையையும் ஊட்டச்சத்தையும் பாதுகாக்கின்றன.

மண் பாத்திரம் ஒரு மெதுவான வெப்ப கடத்தியாக செயல்படுவதால் உணவில் உள்ள விட்டமின்கள் அழிவதில்லை. அதிக வெப்பத்தில் விரைவாக சமைக்கும் நவீன முறைகள் உணவின் சத்துக்களை பாதிக்கும். மண் பானை இந்த பிரச்சனையை இயல்பாகவே தவிர்க்கிறது.

பாத்திரம் வெப்ப பரவல் ஊட்டச்சத்து பாதிப்பு
மண் பாத்திரம் சீரான மெது வெப்பம் மிகவும் குறைவு
அலுமினியம் விரைவான வெப்பம் அதிகம்
நான்-ஸ்டிக் விரைவான வெப்பம் நடுத்தரம் முதல் அதிகம்

Clay Roti Box

மண் பாத்திரத்தின் முக்கிய நன்மைகள்

1. இயற்கையாகவே காரத்தன்மை (Alkaline) இயல்பு கொண்டவை

மண் பானைகள் இயற்கையாக காரத்தன்மை (ஆல்கலைன்) கொண்டவை என்பதால், அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுகளின் pH சமநிலையை சீராக்கி, அவற்றை எளிதில் செரிமானமாக உதவுகின்றன. கிரேக்க மற்றும் இந்திய ஆயுர்வேத மரபுகள் இரண்டுமே மண் பாத்திரத்தில் சமைப்பதன் இந்த குணத்தை நீண்ட காலமாக அங்கீகரித்துள்ளன. அமிலமான உணவுகளை அடிக்கடி சாப்பிடுவோருக்கு இது ஒரு இயற்கையான தீர்வாக கருதப்படுகிறது.

2. இயற்கை சத்துக்களை தக்கவைக்கும்

மண் பானைகளில் சமைக்கும் போது, உணவின் இயற்கைச் சத்துக்கள் நன்கு தக்கவைக்கப்படுகின்றன. மண்ணில் உள்ள கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் சிறிய அளவில் உணவுடன் சேரக்கூடும். இதனால் சுவையுடனும் பாரம்பரிய நன்மைகளுடனும் கூடிய உணவைப் பெறலாம்.

3. சேமிக்கும் உணவை இயற்கையாக பாதுகாக்கும்

மண் பாத்திரங்கள் இயற்கை களிமண்ணால் தயாரிக்கப்படுவதால், பிளாஸ்டிக் பாத்திரங்களில் காணப்படும் BPA போன்ற ரசாயனங்கள் இதில் இல்லை. உணவை இயற்கையான முறையில் சேமிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தேர்வாகும். மேலும், தயிரை மண் பாத்திரத்தில் தயாரிக்கும்போது அதிகப்படியான ஈரப்பதம் உறிஞ்சப்படுவதால், தயிர் கெட்டியாகவும் கிரீமியான பதத்துடனும் அமையும்.

4. எண்ணெய் உபயோகத்தை குறைக்கும்

மண் பாத்திரத்தின் இயல்பான மேற்பரப்பு சமையலுக்கு குறைவான எண்ணெய் போதும் என்ற தன்மை கொண்டது. நான்-ஸ்டிக் பூசுதல் போல் வேதியியல் முலாம் இல்லாமலேயே இது சாத்தியமாகிறது. குறைவான எண்ணெயில் சமைப்பது நீண்ட காலத்தில் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

5. இயற்கை சூழலில் முளைக்கட்ட உதவும்

மண் பாத்திரங்களில் முளைகட்டும்போது, விதைகள் இயற்கை மண்ணில் வளர்வதைப் போன்ற சாதகமான சூழலைப் பெறுகின்றன. மண் பாத்திரங்களின் நுண்துளை (porous) தன்மை அதிகப்படியான ஈரப்பதத்தை வெளியேற்ற உதவுவதால், பூஞ்சை (mold) உருவாகும் வாய்ப்பு குறைகிறது. இதன் மூலம் முளைகட்டிய தானியங்கள் நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடனும் தரத்துடனும் இருக்கும்.

6. உணவின் சுவை கூட்டும்

இது அறிவியல் விளக்கம் தேவையில்லாத ஒரு நன்மை. மண் பாத்திரத்தில் வைத்த தண்ணீரின் சுவை வேறு, அதில் செய்த சாம்பாரின் சுவை வேறு. மண்ணின் இயற்கையான தன்மை உணவில் ஒரு இயற்கை வாசனையையும் ஆழமான சுவையையும் சேர்க்கிறது என்று சமையல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதை நாமமும் பலமுறை உணர்ந்திருப்போம்.

வீட்டில் மண் பாத்திரம் பயன்படுத்துவது எப்படி?

மண் பாத்திரம் முதன்முதலில் வாங்கும் போது அதை நேரடியாக அடுப்பில் வைக்கக்கூடாது. அதை தண்ணீரில் இரவு முழுக்க ஊற வையுங்கள். பின்னர் நன்கு காய வையுங்கள். இந்த செயல்முறை மண் பாத்திரத்தை பலப்படுத்தும். முதல்முறை சமைப்பதற்கு முன், பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும், வெங்காயம் போட்டு நன்கு எல்லா பக்கத்திலும் படும்படி வதக்கவும். நன்கு வதங்கியதும், அதை கொட்டிவிடவும். இது அந்த பாத்திரத்தை சமையலுக்கு பழக்கப்படுத்த உதவும். 

முக்கிய குறிப்பு: சமைத்து முடித்ததும், உணவை வேறு பாத்திரத்திற்கு மாற்றிய பிறகு, சமைத்த சூடான மண் சட்டியை உடனடியாக குளிர்ந்த நீரில் இடுவதை தவிர்க்கவும். மற்றும் மண் பாத்திரங்கள் இண்டக்ஷன் அடுப்பிற்கு மற்றும் டிஷ் வாஷர் மெஷினுக்கு ஏற்றது இல்லை.

பயன்பாட்டு நிலை சரியான வெப்பம் கவனிக்க வேண்டியது
முதல் முறை மிகவும் குறைவு நீரில் ஊறவைத்த பிறகு பயன்படுத்துக
தினசரி சமையல் நடுத்தர வெப்பம் திடீர் வெப்ப மாற்றம் வேண்டாம்
சேமிப்பு மிதமான வெப்பம் வறண்ட இடத்தில் வையுங்கள்

மண் பாத்திரத்தில் என்ன சமைக்கலாம்?

சாதம், சாம்பார், ரசம், கூட்டு, கஞ்சி, பாயசம் என்று தென்னிந்திய சமையல் கலாச்சாரத்தில் மண் பாத்திரம் எல்லா இடங்களிலும் வந்திருக்கிறது. குறிப்பாக மண் பானையில் வைத்த தயிர் மிகவும் சிறந்ததாக இருக்கும். வெப்பத்தை மிதமாக தக்க வைக்கும் தன்மையால் நொதிப்பு செயல்முறை சீராக நடைபெறும்.

ஆயுர்வேத நிபுணர்களும் ஊட்டச்சத்து ஆலோசகர்களும் கஞ்சி மற்றும் சூப் வகைகளை மண் பாத்திரத்தில் சமைப்பதை குறிப்பாக பரிந்துரைக்கிறார்கள். 

மண் பாத்திரங்கள் எங்கு வாங்குவது? எதை தேர்வு செய்வது?

சந்தையில் பல வகையான மண் பாத்திரங்கள் கிடைக்கின்றன. ஆனால் தரமான, சுத்தமான மண்ணில் செய்யப்பட்டவற்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். வேதிப்பொருட்கள் கலந்த மண் அல்லது செயற்கை நிறமேற்றிய பாத்திரங்கள் உடலுக்கு நன்மை செய்வதற்கு பதில் தீங்கு செய்யும்.

Ulamart-ல் கிடைக்கும் மண் பாத்திரங்கள் மிகவும் தரமானவை. எந்த வித செயற்கை பூச்சுகளோ, செயற்கை நிறமிகளோ அற்றது. தினசரி பயன்பாட்டிற்கு உகந்தது. ஆரோக்கியமான சமையல் முறைகளை அறிந்து தேர்ந்தெடுக்கும் இன்றைய தலைமுறைக்கு மண் பாத்திரம் ஒரு ஆரோக்கியமான தீர்வாக இருக்கிறது. சுவையும் சத்தும் ஒரே நேரத்தில் கிடைக்கும் இந்த பாரம்பரிய கலையை உங்கள் சமையலறையில் மீண்டும் வரவேற்க இது சரியான நேரம்.