100% இயற்கையான களிமண்ணால் செய்யப்பட்ட இந்த தயிர் பானை, வெறும் சமையலறை உபகரணம் மட்டும் அல்ல; இது நம் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும்.
தயிரை இயற்கையான முறையில் சேர்த்து வைக்க இது சிறந்ததொரு தேர்வாகும். மேலும் இது மூடியுடன் இணைந்து வருகிறது. உங்கள் சமையலறைக்கு பாரம்பரிய அழகு சேர்க்கும், பழமையான தோற்றத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதால் இவை பார்ப்பதற்கும் மிகவும் அழகாக காட்சியளிக்கின்றன. புது மனை புகு விழா, திருமண நாள் பரிசு என இயற்கை மற்றும் கைவினையை விரும்புபவர்க்கு நினைவுப் பொருளாக அளிக்க சிறந்தது.
இந்த பானையை தயிர் உறை ஊற்றுவதற்கு மட்டுமல்லாமல், சட்னி, பொரியல் போன்றவற்றை சேமித்து வைக்கவும் பயன்படுத்தலாம்.