வேப்பம் எண்ணெய் - நீம் ஆயில் : வெயில் காயவைக்கப்பட்ட வெப்பம் பழத்திலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் வேப்பம் எண்ணெய்/வேப்பை எண்ணெய் என படுகிறது.வேப்பம் எண்ணெய் சருமத்தின் அழகை காக்கக்கூடியது மேலும், தோல் பராமரிக்க உதவுகிறது. வெப்பம் எண்ணெய், பொடுகு, உச்சந்தலையில் வறட்சி, உச்சந்தலையில் அரிப்பு, பேன், பூச்சிகளை நீக்குகிறது.
இளநரை மற்றும் வழுக்கை ஆகியவற்றைத் தடுக்கிறது. முகப்பரு, வடுக்கள், தடிப்புத் தோல் அழற்சி, அரிப்பு மற்றும் பூஞ்சை/பாக்டீரியா தொற்றுநோய்களின் தோலுக்கும் சிகிச்சையளிக்கிறது.
குறிப்பு: வேப்ப எண்ணெய் கண்டிப்பாக வெளிப்புற பயன்பாட்டிற்கு மட்டுமே.
வேப்ப எண்ணெய் ஒரு கிருமி நாசினி, ஒட்டு உன்னி தாக்குதலை கட்டுப்படுத்த கூடியது. பூஞ்சை தாக்குதலை கட்டுப்படுத்த கூடியது. மொத்தத்தில் "சர்வரோக நிவாரணி" என்று அழைக்கப்படுகிறது.
தோலில் ஏற்படும் சுருக்கங்கள் குறைய உதவுகிறது. மேலும், உடலில் ஏற்படும் காயங்கள், கிருமிகளின் தாக்கத்தை குறைத்து காயங்கள் ஆற உதவுகிறது.
தலைமுடியில் உள்ள பொடுகு காரணமாக, அரிப்பை குறைத்து, இயற்கையான தலைமுடியின் pH Value சரி செய்து, தலைமுடியில் வறட்சிக்கு நீக்கி தலைமுடி நன்கு வளர உதவும்.
வேப்பம் எண்ணெய், படர் தாமரை, சேற்று புண், நகச்சுத்தி, குணப்படுத்த உதவும்.
குழந்தைகளுக்கு: இனிப்பு அதிகம் உண்ணும் குழந்தைகளின் வயிற்றில் குடற்பூச்சிகள் வெளியேற்ற வெப்பம் எண்ணெய் அரை டீஸ்பூன் வேப்பம் எண்ணெய் கொடுக்க உதவுகிறது.
கொசுக்கடி: கொசுக்கள் மூலமாக பரவும் சிக்குன்குனியா, டெங்கு, மலேரியா, மற்றும் யானைக்கால் வியாதி வராமல் தடுக்க வேப்பை எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெயை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்து கொண்டு உறங்குவதால், கொசுக்கடி மற்றும் பூச்சி கடிகளிலிருந்து இருந்து தப்பிக்கலாம்.
How to use Neem oil?
தேங்காய் எண்ணெயுடன் சம அளவு வேப்பம் எண்ணெய் கலந்து, தலைமுடியில் ஆரை மணி நேரம் ஒரு மணி நேரம் வரை ஊறவைத்து பின் ஷிக்காய் தூள் பயன்படுத்தி சுத்தம் செய்ய. தலைமுடியில் பொடுகு நீங்கி, தலைமுடி நன்கு வளர உதவும்.
பேன் தொல்லை நீங்க, தலைமுடியில் வேப்ப எண்ணெய் தலைமுடியில் இரவில் தடவி, பின் துணியால் கட்டிக்கொள்ளவும், நன்கு தூங்கிய பின், மறுநாள் காலை குளிக்க பேன் தொல்லை நீங்கிவிடும்.