Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Buy 3 in 1 Combo & Save 24%
இந்த கிச்சன் செட் காம்போ குழந்தைகளின் பாரம்பரிய mini samayal விளையாட்டுகளுக்கு சிறந்த ஒன்றாக இருக்கிறது! இதில் 14 பொருட்கள் கொண்ட களிமண் சமையல் செட், 11 பொருட்கள் கொண்ட கற்களால் செய்யப்பட்ட சமையல் செட் மற்றும் சிறிய மர சப்பாத்தி கட்டை கூட சேர்க்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முற்றிலும் இயற்கையான பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது.
இயற்கை களிமண் மற்றும் கைவினைப் பொருட்கள் சேர்ந்த இந்த காம்போ, நவராத்திரி கொலு மொம்மைகள், வீட்டு அலங்காரம், மற்றும் பிறந்தநாள் பரிசு (பர்த்டே கிப்ட்) இவைகளுக்கும் மிகவும் சிறந்த ஒன்றாக இருக்கும். மேலும் இவை குழந்தைகளுக்கு பாரம்பரிய கலாச்சாரம், சிந்தனை திறன், கை இயக்க திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் சிறந்த வாய்ப்பும் அளிக்கிறது.
குழந்தைகளில் விளையாட்டுப் பொருட்கள் 3 இன் 1 காம்போ | களிமண் சமையல் செட், கல் மினியேச்சர் & சிறிய மர பூரி கட்டை.
மினி கிச்சன் செட் 3 இன் 1 காம்போ - குழந்தைகள் சமையல் செட் மற்றும் வீட்டு அலங்காரத்துக்கு!
இந்த காம்போ ஆனது பாரம்பரிய களிமண் மற்றும் கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 14 பொருட்கள் கொண்ட Clay Kitchen Set, 11 பொருட்கள் கொண்ட Stone Miniature Cooking Set மற்றும் சிறிய மர பூரி கட்டை ஆகியவை அடங்கியுள்ளது.
களிமண் கிச்சன் செட்டில் பாரம்பரிய பானை, அடுப்பு, தோசைக் கல் போன்ற சமையல் பாத்திரங்கள் அடங்கும்.
கல்லால் செய்யப்பட்ட மினியேச்சர் செட்டில் ஆட்டுக்கல், உரல் உலக்கை, அம்மி, இயந்திரம் (ராய்கல் / ராகி கல்), உரைக்கல் (rubbing stone) மற்றும் இடிகல் (mortar pestle) போன்ற பொருட்கள் உள்ளன.
குழந்தைகளுக்கு இது mini samayal விளையாட்டாகவும், வீட்டு அலங்காரம், அலுவலகம் அல்லது திருமண நாள், நவராத்திரி கொலு, தீபாவளி பரிசு போன்ற பண்டிகை நாட்களில் home decor-ஆகவும், நினைவுப் பரிசாகவும் பயன்படுத்தலாம். இயற்கையான ஆர்கானிக் களிமண் பொருட்களால் செய்யப்பட்டதால், இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றது மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது.
No reviews yet. Be the first to share your experience!