Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Buy 25 kg, Save ₹786
KG:0.5 KG
பாரம்பரிய அரிசிவகைகளில் ஒன்று இந்த காட்டுயானம். காட்டுயானம் அரிசியானது சிவப்பு நிறத்தில் கொஞ்சம் தடித்து காணப்படும். மற்ற அரிசி வகைகளை விட மருத்துவ குணம் அதிகம் உடையது.
சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு வகைகளில் காட்டுயானம் அரிசியின் பங்கு மிகவும் முக்கியமானது.
சமைத்த காட்டுயானம் பச்சரிசி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எளிதில் செரிமாகும்.
காட்டுயானம் பச்சை அரிசி - ஆர்கானிக் தீட்டப்படாத அரிசி
7 மாதங்களில் வளர்த்து அறுவடைக்கு தயாராக இருக்கும் இந்த காட்டுயானம் நெல்லானது 7 அடி முதல் 8 அடிவரை நன்கு செழித்து வளர்ந்து காணப்படும். யானையை மறைக்கும் அளவிற்கு வளர்ந்து வருவதாலும், இந்த காட்டுயானம் உண்பதால் உடலுக்கு யானை பலம் கிடைக்கும் என்பதாலும் இப்பெயர் பெற்றது. குறிப்பாக இந்த அரிசியை அன்றாட உணவில் எடுத்துக்கொண்டால், நீரிழிவு நோயே நம்மை அண்டாது. கஞ்சி வடித்து பயன்படுத்துவது நன்மைதரும்.
Alternative Names: காட்டுயானம் அரிசி | காட்டுயானம் பச்சை அரிசி | சிவப்பு காட்டுயானம் அரிசி
No reviews yet. Be the first to share your experience!