புதுமையான பலவண்ண காகிதத்தாள் பென்சில், இந்த பென்சில் சீவும் போது பல வண்ணங்களில் பென்சிலின் பேப்பர் சீவல்கள் உதிரும்(Magic Layer Pencil).
இந்த பென்சில் 100% மறுசுழற்சி காகிதங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த பென்சிலை சாதாரண பென்சில் போலவே கூராக்கவும் ஷார்ப்னர் கொண்டு சீவவும் முடியும். மரமோ அல்லது மரக்கூழோ இதில் பயன்படுத்தப்படவில்லை. மற்ற பென்சில் போல இதில் எந்த ஒரு மேல் பூச்சும், பூசப்படவில்லை.