வெட்டிவேர் என்பதை காஸ் காஸ் புல் அல்லது குஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இதன் தாவரவியல் பெயர் Chrysopogon zizanioides. இது தனித்துவமான வாசனை கொண்ட ஒரு சிறந்த மூலிகையாகும். வெட்டிவேர் என்பது மனதையும் உடலையும் புத்துணர்ச்சி பெற உதவும் இயற்கையான டானிக் ஆகும். வெட்டி வெரு மூலிகை சிரப் உடல் வெப்பத்தை குறைக்க உதவுவது நன்கு அறியப்பட்டதாகும். இந்த தனித்துவமான வேர் தண்ணீரில் உள்ள அசுத்தங்களைக் குறைக்கப் பயன்படுகிறது; வயிற்று தொடர்பான பிரச்சினைகள் குறைக்கவும் மற்றும் உடலின் வெப்பம் குளிர்விக்க உதவுகிறது. இதை குடிநீரில் சேர்ப்பது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிதான வழியாகும்.
உடலின் உஷ்ணம், நீர் கடுப்பு, வயிற்று கடுப்பு குறைக்க - வெட்டிவேர்+பெருஞ்சீரகம் சம அளவு எடுத்து பொடி செய்து 1 லிட்டர் வெந்நீரில் 200 மி.கி. குடிக்க தீர்வு கிடைக்கும்.
வெட்டிவேரை மண் பானை/பித்தளை தவளை உள்ள குடி-நீரில் ஊறவைத்து, அந்த குடிநீரை தினமும் குடித்து வர கோடை காலங்ககளில் ஏற்படும் உடல் சுடும், தாகம் தணியும், நாவறட்சி, ஹீட் ஸ்ட்ரோக்கு குறைபாடுகளை கட்டுபடுத்தும்.
வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும்.
மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும்.
வெட்டிவேர் எண்ணெய்யை, நீண்ட நாட்களாக ஆறாமல் உள்ள வடுக்கள் மீது தடவி வர, அவை இருந்த இடம்கூட தெரியாது.
வெட்டி வேருடன் சற்று வெப்பப்படுத்திய தேங்காய்/நல்லெண்ணெய் சேர்த்து, பின்னர் ஆறவைத்து, அந்த எண்ணெய்யை தேய்த்து எண்ணெய் குளிக்கலாம்.
சோப்பு/அரப்பு/சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. அழகாண முகம் பெறலாம்.
கோடை காலத்தில் உடலில் உண்டாகும் அதிக வியர்வை/வியர்வை வாடை மற்றும் வியர்வையினால் ஏற்படும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து, பின் அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம.
தீக்காயங்களில் வெட்டிவேரை அரைத்து பூசினால் காயங்கள் விரைவில் குணமாகும். பாத எரிச்சல், குதி-கால் வலி போன்றவற்றிற்கும் வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் இதமாக மசாஜ் செய்யலாம்.
காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து பருகவேண்டும். அந்த நீரை பருகுவதால் செரிமான ஆற்றல் அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணும் குணமாகும். முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. சிறு சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் சிறுதளவையும், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும்.
How to use Vetti veru | Khus | Khas
50கிராம் அளவு சுத்தமான வெட்டிவேரை, 2 லிட்டர் குடிநீரில் போட்டு, ஐந்து மணி நேரம் பின் குடிநீராக அருந்தலாம், இந்நீரை அருந்துவதால் களைப்பு நீங்கி புத்துணர்ச்சி பெறலாம்.
வெட்டிவேர் சர்பத்/சிரப், கோடை காலத்தின் களைப்பை, நாவறட்சி நீங்க உதவும்.
வியர்வை துர்நாற்றம் நீங்க, குளிக்கும் நீரில் வெட்டிவேர் போட்டு குளிக்கலாம் அல்லது வெட்டிவேர் சோப்பு பயன்படுத்திக்கொள்ளலாம்.
வெட்டிவேரை நன்கு மெல்ல, பற்கள்/நாக்கு சுத்தமாகம்.
வெட்டிவேர் நீரில் முகம் கழுவ, நாளடைவில் முகப்பரு நீங்கி இளமையா முகம்தோற்றம் பெறலாம்.
வெட்டிவேர் எண்ணெய் கொண்டு கலந்த தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்க உதவும்.
FAQ
வெட்டிவேர் என்றால் என்ன?
வெட்டிவேர் என்பது புல் இனம் சார்ந்தது. இந்தியாவில் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வெட்டிவேர் குடிநீர் என்றால் என்ன?
பானையில் குடிநீருடன் சுத்தமான வெட்டிவேரை போட்டு மறுநாள் குடிக்க உடலில் உள்ள கழிவுகளை நீக்கி உறுப்புகளை சீராக வேலை செய்ய உதவுகிறது.
வெட்டிவேரை குளிக்கும் நீரில் போட்டு பயன்படுத்தலாமா?
ஆம் பயன்படுத்தலாம் இதனால் நீரில் உள்ளஅழுக்களை நீக்கி, நல்ல குளிர்ச்சியான மூலிகை நீராக கிடக்கிறது. மேலும், சருமம் சம்மந்தமான குறைபாடுகள் வராமல் தடுக்கிறது.
இயற்கையான முறையில் முகப்பருக்கள் வராமல் இருக்க இன்ன செய்ய வேண்டும்?
வெட்டிவேருடன் சம அளவு கடுக்காய் எடுத்து முதல் இரவு முழுவது நீரில் ஊறவிட்டு பின் மறுநாள் வெட்டிவேருடன் கடுக்காய் அரைத்து முகத்தில் தடவி 10-15நிமிடம் வரை ஊறவைத்து பின் கழுவினால் முகப்பருக்கள் குறைய துவங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெட்டிவேர் பயன்படுமா?
ஆம், வெட்டிவேரை நீரை பண்ணையில் ஊறவைத்து மறுநாள் அருந்த உடலின் உஷ்ணத்தை குறைத்து வயிற்று குறைபாடுகளை அறவே குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றது.