Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

தரமான கலப்படம் எதுவும் இல்லாத சுத்தமான சீரகம்
Grams:100 Grams
Package:Zip Pouch
சீராக நீர், தற்போது நம்மில் பெரும்பாலானோர் குடிக்கும் RO குடிநீருக்கு மாற்றாக சீரக நீர் குடிக்கலாம்.
சீராக குடிநீர் தினசரி குடிக்க உடலில் உள்ள வெப்ப நிலையை சமன் செய்ய உதவுகிறது. கோடை காலத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம். உடல்பருமன் உள்ளவர்கள் தினசரி குடிக்க உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைக்க உதவுகிறது.
சீரகம்
சீரகம் மத்திய கிழக்கு நாடுகளை பூர்விகம் கொண்டுள்ளது. இந்தியாவில் சித்த மருத்துவம், ஆயுர்வேத, மருத்துவத்தில் சீரகத்தின் பங்கு முக்கியமானது. இன்றும் தென்னிந்திய மக்கள் சீராக நீரை குடிநீராக அருந்திவருகின்றனர்.
சீர்+அகம்=சீரகம், சீரான மண்டலத்தை சீர் செய்வதால் இதற்கு சீரகம் என பெயர் உள்ளதா சொல்லப்படுவதுண்டு. இதன் சுவை கார்ப்பு, இனிப்பு சுவையை கொண்டுள்ளது. உடலுக்கு குளிர்ச்சித்தன்மையை அளிக்க கூடியது. இதனை மணம், சுவைகாகவும், மருத்துவ குணத்திற்காகவும் சமையலில் சேர்க்கப்படுகிறது.
சீரகம் சம்பந்தமான பல்வேறு ஆய்வுகளில் புற்று நோய்க்கு எதிராக செயல் புரிவதக அறியப்படுகிறது. வட இந்திய மக்கள் Jal Jeera (ஜல் ஜீரா) வெயில் காலத்தில் புத்துணர்ச்சியூட்டும் நீராக குடிக்கிறார்கள்.
பொடித்த சீரகத்தை வெண்ணெயுடன் கலந்து உண்ண குடற்புண்(Ulcer) குறையும்.
Alternative Names:cummin seed | Jeera | Jalakara | Jira | Seeragam | Siragam
No reviews yet. Be the first to share your experience!