கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது, இவ்வகை எண்ணெய் Clove Oil - கிராம்பு எண்ணெய் எனப்படுகிறது. நமது தினசரி பயன்படுத்தும் பற்பசைகளில்(Tooth Paste) சேர்க்கப்படுகிறது. கிராம்பு எண்ணெய் வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது.
பல் வலி ஏற்படும் போடு ஒரு கிராம்பினை மெல்ல கடித்து, பிறகு வலி உள்ள இடத்தில வைக்க பல் வலி குறையும்.
தேள்கடி மற்றும் விசக்கடிக்கு பாட்டி வைத்தியமாக கிராம்பினை பயன்படுத்தியுள்ளார்.
கோழை, வயிற்றுப் பொருமல் அல்லது வாயு கோளாறு போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது.
வயிற்றில் சுரக்கும் பசியை thoondum அமிலத்தைச் சீராக்கும் மற்றும் ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை அதிகரிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றது.
உணவில் ஏற்படும் Aflatoxin என்ற நஞ்சை, கிராம்பிலுள்ள யூகினால் Eugenol அழிக்கும்.
கிராம்பில் அதிகளவில் ஆன்டிஆக்ஸிடென்ட் உள்ளது, இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும், இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைத்து, இரத்தத்தை தூய்மை படுத்துகிறது.
பற்கள் மற்றும் வாயினை துர்நாற்றம் குறைக்கும்.
கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்(கர்பிணி பெண்களுக்கு ஏற்றது).
நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு, ஒன்றை லிட்டர் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்(இது பாட்டி வைத்திய முறையாகும் ).
சிறிது சமையல் உப்புடன் கிராம்பை தண்ணிரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்க (Gargle) செய்ய தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும் மேலும் தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்கலாம். கிராம்பு எண்ணெய்யுடன்(2-3 Drops) தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு(5-8ml) சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சீராகும் அல்லது முப்பது மில்லி குடிநீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து பின், அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடிக்க ஆஸ்துமா கட்டுப்படும்.
கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட பல்/ஈறுகளில் தடவிவர வலி குறைந்து நிவாரணம் கிடைக்கும்.
தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.