கம்பு அவல் சிவப்பு அரிசி அவுலை போன்றே தயாரிக்கப்படுகிறது. தென்னிந்திய மக்களின் வழக்கப்படி சமைக்கப்படாத உணவுகளை பண்டிகை காலங்களில் இறைவனுக்கு படையல் இடுவது வழக்கம். உதாரணமாக அவல், பொரி, வெல்லம் கலந்து படையலிடுவது.
சாதாரண வெள்ளை அரிசிக்கு மாற்றாக சிறுதானியங்கள் ஏற்றது. குறிப்பாக வெள்ளை அரிசி சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவினை ரத்தத்தில் அதிகரிக்க செய்கிறது
தினசரி பயன்பாட்டில் ரத்தத்தின் சர்க்கரை அளவினை குறைக்கிறது
கம்பு அவல் பயன்படுத்த நாளடைவில் உடற்பருமன் குறைக்க உதவுகிறது
கம்பு அவலை நேரடியாவும், சமைத்தும் பயன்படுத்தலாம், பயன்படுத்துவது மிக எளிது
சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது, நார்சத்து, வைட்டமின், மினெரல்ஸ், ஜின்க், இரும்பு சத்து இதில் நிறைந்து உள்ளது
பள்ளி கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு நொறுக்கு தீனியாகவும் கொடுக்கலாம்