உங்கள் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் உணவு மேசையில் பாரம்பரியத்தின் ருசியை அழைத்து வாருங்கள். கைதேர்ந்த கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட களிமண் பாத்திரங்கள், காலத்தைக் கடந்த பாரம்பரிய அழகையும் தினசரி உபயோகத்தையும் ஒன்றிணைத்து, உங்கள் வீட்டிற்கு அழகு சேர்க்கும்.
இந்த பாத்திரங்கள் எந்தவித செயற்கை வண்ணங்களோ அல்லது கடுமையான இரசாயனங்களோ ஏதுமின்றி தயாரிக்கப்பட்டவை. எனவே, இவை ஆரோக்கியத்திற்கு முற்றிலும் பாதுகாப்பானவை. இவை சமைக்க ஏற்றவை அல்ல, ஆனால் உணவை சேமித்து வைக்கவும், பரிமாறவும் உதவும்.
மேலும் இவற்றை நீங்கள் கிப்ட் பொருளாகவும் பயன்படுத்தலாம். திருமண நாள், புது மனை புகு விழா, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களுக்கு பொருத்தமான பரிசு பொருளாக இருக்கு.
பெட்டியில் உள்ளவை : பெட்டியில் உள்ளவை : இரண்டு களிமண் பாத்திரங்கள் மூடியுடன். ஒரு பெரிய பாத்திரம் (6.5 அங்குலம்) மற்றும் ஒரு சிறிய பாத்திரம் (5 அங்குலம்) ஆகும்.
ரசாயனமற்ற பாதுகாப்பு : மண்ணின் தூய்மை நிறைந்த களிமண், எவ்வித ரசாயனப் பயன்பாடும் இல்லாமல் உருவாக்கப்படுகிறது.
சுவையூட்டும் உணவு : சமைத்த உணவில் உள்ள பொருட்களின் சத்துக்களை காக்கும் தன்மை கொண்டது.
இயற்கையான புத்துணர்ச்சி : களிமண் பாத்திரங்களில் வைக்கும் உணவுகள் நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும், அவை உணவின் இயற்கையான சுவையையும், சத்துக்களையும் பாதுகாக்க உதவுகின்றன.
ஆரோக்கிய வாழ்வு : உணவின் இயற்கை மற்றும் சுவையை மிக அழகாக மேம்படுத்தும்.
சூழல் பாதுகாப்பு : சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத ஒரு சிறந்த தேர்வாகும்.
பாரம்பரிய அழகு : எளிமையும் அழகும் கலந்து இருக்கும், பாரம்பரிய மகிழ்ச்சி தரும்.
கைவினை மரபு : பாரம்பரிய கைவினைப் பணியின் சிறந்த வெளிப்பாடு.
நீடிக்கக்கூடியது : சரியாக பராமரித்தால், நீண்ட காலம் பயனளிக்கும். மிகவும் உறுதியானது.
பயன்படுத்தும் மற்றும் சேமிக்கும் வழிமுறைகள்:
முதன் முறை உபயோகப்படுத்துவதற்கு முன், அவற்றை 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, மெல்லிய ஸ்பாஞ்ச் அல்லது துணி கொண்டு மெதுவாக துடைக்கவும். பின்னர் காற்றில் நன்கு உலர விடவும். வலுவான உராய்வைத் தவிர்க்கவும்.
கடுமையான டிடர்ஜென்ட் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் மண் இயற்கையிலேயே சிறிது நுண்துளைகள் (porous) கொண்டிருக்கும்; அதனால் அது உங்களது ஆரோக்த்திற்கு கேடு விளைவிக்கக்கூடும்.
சிறந்த சுத்தம் பெற சாம்பல் போன்ற இயற்கையான பொருளை பயன்படுத்துவது மண் பாத்திரங்களுக்கு மிகவும் சிறந்த முறையாகும்.
FAQ
1. மண் பாத்திரங்களை முதன்முறையாக பயன்படுத்தும் முன் என்ன செய்ய வேண்டும்?
முதல் முறை பயன்படுத்துவதற்கு முன் பாத்திரத்தை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, மென்மையான ஸ்பாஞ் அல்லது துணி கொண்டு துடைக்கவும். பின்னர் நன்கு காற்றில் உலரவிடவும்.
2. இதில் உணவு வைக்கப்போதும் சுவை மாறுமா?
இல்லை! மண் பாத்திரங்களில் வைக்கும் உணவிற்கு சிறிது இயற்கை சுவை, மணம் மற்றும் சத்து சேரும் — அது தான் இதன் சிறப்பு.
3. இதை பரிசு பொருளாக பயன்படுத்தலாமா?
மிகவும் சிறந்த பரிசு! புது மனை புகு விழா, திருமண நாள் பரிசு, தீபாவளி பரிசு போன்ற பல சந்தர்ப்பங்களுக்கு இது அருமையான தேர்வாக இருக்கும்.
4. இந்த பாத்திரங்களில் எவ்வளவு நாட்கள் வரை பயன்படுத்தலாம்?
சரியான பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்தால், மண் பாத்திரங்கள் நீண்ட காலம் பயன்படும். சிலரால் சில வருடங்கள் கூட யன்படுத்தப்பட்டுள்ளன!