✬ தூயமல்லி அரிசி என்றால் என்ன, மற்றும் இது மற்ற அரிசி வகைகளுடன் எப்படி வேறுபடுகிறது?
தூயமல்லி அரிசி ஒரு பாரம்பரிய அரிசி வகையாகும், இது நன்கு செரிமானம் செய்ய உதவும், மேலும் இதில் அதிக சத்துக்கள் உள்ளன. இது மற்ற சாதாரண அரிசிகளுடன் ஒப்பிடும் போது, சுவையும் ஆரோக்கியமும் அதிகமாக இருக்கும்.
✬ ரெடிமேட் முறுக்கு மாவு கொண்டு முறுக்கு சுடுவது எப்படி?
தூயமல்லி அரிசி, பாசி பருப்பு, உளுந்து பருப்பு, மிளகாய் தூள், ஓமம், எள்ளு, பெருங்காய பொடி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்து வறுத்து, ஆறவைத்து மாவாக அரைத்தால், தூயமல்லி இன்ஸ்டன்ட் முறுக்கு மாவு தயார். இதை ஒரு கற்று புகாத பாட்டலிலில் போட்டு வைத்தால் ௬ மாதங்கள் வரை உபயோக படுத்தலாம்.
இந்த இன்ஸ்டன்ட் மாவு கொண்டு நொடிகளில் முறுக்கு சுடலாம். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து, முறுக்கு அச்சில் இட்டு, வட்ட வடிவில் சுற்றி, சூடான மரச்செக்கு காதலி எண்ணையில் பொரித்து எடுத்தால் முறுக்கு ரெடி.
✬ இதில் கை முறுக்கு சுடலாமா?
நிச்சயமாக! இந்த மாவு கொண்டு கை முறுக்கு, தட்டை, ரிப்பன் பகோடா, தித்திப்பு முறுக்கு, முறுக்கு சாலட், போன்ற பல முறுக்கு ஸ்னாக்க்ஸ் வகைகள் செய்யலாம்.
✬ தூயமல்லி அரிசி பயன்படுத்தி செய்யும் ஸ்னாக்ஸ் உடலுக்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் தருகிறது?
தூயமல்லி அரிசி சுலபமான செரிமானம், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் உடலுக்கு பல சத்துக்கள் வழங்குகிறது. இது பாரம்பரிய ஸ்னாக்ஸ் மற்றும் school snacks க்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
✬ இந்த முறுக்கு மாவு எவ்வாறு நீண்ட நாட்களுக்கு கெடாமல் வைத்திருக்கலாம்?
காற்றுப் புகாமல் சரியான முறையில் வைக்கப்பட்டால், இந்த மாவு 6 மாதங்களுக்கு கெடாமல் இருக்கும். பாக்கெட் ஓபன் செய்து விட்டால் மீத மாவை நன்கு மூடி குளிர்சாதன பெட்டியில் வைத்தால் நீண்ட நாளைக்கு உபயோக படுத்தலாம்.
✬ இந்த இன்ஸ்டன்ட் முறுக்கு மிக்ஸ் குழந்தைகள் சாப்பிடக் கூடியதா?
ஆம்! இந்த முறுக்கு மாவு தூய்மையான முறையில் வீட்டிலேயே தயாரிக்க பட்டது. மேலும் இதில் சோடா மாவு, ப்ரீசர்வ்டிவ்ஸ், எம்.ஸ்.ஜி போன்ற எந்த ஒரு ரசாயன கலப்பும் இல்லாதது. (No MSG, No Preservatives, No artificial colors)
✬ Indha Murukku maavu araippadhu epadi?
இது இன்ஸ்டன்ட் முறுக்கு மாவு. அதனால் இதை அரைக்க தேவையில்லை. அப்படியே உப்பும், தண்ணீரும், சேர்த்து பிசைந்து முறுக்கு சுடலாம்.