
- Search
- Language
Language
- 0Cart
ஆளிவிதைகள் மற்ற மசாலாப் பொருட்களுடன் சம விகிதத்தில் வறுக்கப்பட்டு சேர்க்கப்படுவதால், அதன் சுவை மற்ற பொருட்களுடன் கலந்து, ஒரு சீரான மற்றும் சுவையான பொடியாக இருக்கும். ஆளிவிதையின் தனித்துவமான சுவை மற்ற மசாலாப் பொருட்களுடன் இணைந்து, ஒரு சிறந்த சுவையை தரும்.
காற்று புகாத டப்பாவில், குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமித்து வைப்பதன் மூலம் 6 மாதங்கள் வரை அதன் புத்துணர்ச்சி (freshness) மற்றும் சுவையை பாதுகாக்கலாம். ஈரப்பதம் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இட்லி பொடி செய்ய தேவையான பொருட்களான, முழுமையான ஆளிவிதை, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பொட்டுக்கடலை, கறிவேப்பிலை, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் போன்றவற்றை மிதமான தீயில் வருது ஒன்று சேர்த்து சற்று கொர கொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.
இது மிதமான காரத்துடன் தயாரிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, அவர்களின் காரத் திறனுக்கு ஏற்ப சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்துப் பரிமாறலாம்.
இல்லை, எங்கள் ஆளிவிதை இட்லிப் பொடி முற்றிலும் இயற்கையான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் எந்தவிதமான செயற்கை வண்ணங்கள், சுவையூட்டிகள் அல்லது பாதுகாக்கும் பொருட்களும் சேர்க்கப்படவில்லை. (no preservatives, no artificial colors or flavors)