
- Search
- Language
Language
- 0Cart
இயற்கை உரத் தொட்டிகளைப் பயன்படுத்துவது எப்படி?
உங்கள் இயற்கை உரத் தொட்டிகளைப் பயன்படுத்துவது மிக எளிது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் வீட்டுத் தோட்டத்தைப் பசுமையாக்குங்கள்:
தயார் செய்தல்:
உங்களுக்குக் கிடைத்த 2 இயற்கை உரத் தொட்டிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு தொட்டியிலும் கொடுக்கப்பட்டுள்ள கோகோபீட் (தேங்காய் நார் மண்) நிரப்புங்கள். கொக்கோபீட்டை கெட்டியாக இருக்கும். அதனை பயன்படுத்துவதற்கு முன் ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றவும்... அது தண்ணீரை உறிஞ்சி மென்மையாகும் மேலும் அதன் அளவும் அதிகரிக்கும்.
விதைகள் நடுதல்:
தொட்டியில் உள்ள கோகோபீட் நடுவில் சிறு குழி செய்து, 2 அல்லது 3 விதைகளை நடவும். பிறகு, சிறிது கோகோபீட் கொண்டு மூடி விடவும்.
நீர் ஊற்றுதல்:
விதைகள் நட்ட பிறகு, மெதுவாக தண்ணீர் ஊற்றுங்கள். கோகோபீட் நீரை உறிஞ்சும் என்பதால், அதிகம் ஊற்ற வேண்டாம்.
மண் காய்ந்தால் மட்டும், மீண்டும் நீர் பாய்ச்சவும்.
செடிகள் வளர விடுதல்:
தொட்டிகளை நல்ல வெளிச்சம் அல்லது சூரிய ஒளி படும் இடத்தில் வையுங்கள். மாட்டு எரு கலந்த சத்துக்கள் செடிகள் நன்கு வளர உதவும்.
நிலத்தில் நடுதல்:
செடிகள் வளர்ந்ததும் (3-4 இலைகள் வந்ததும்), இயற்கை உரத் தொட்டியை அப்படியே எடுத்து, உங்கள் பெரிய தொட்டி அல்லது நிலத்தில் நடவும்.
இந்தத் தொட்டி மண்ணில் தானாகவே மக்கி, செடிகளுக்கு மேலும் சத்துக்களைக் கொடுத்து, வேர்களுக்குப் பாதிப்பு இல்லாமல் பாதுகாக்கும்.
இந்த மக்கும் தொட்டிகள், உங்கள் இயற்கை விவசாயத்திற்கு சிறந்தவை.