
- Search
- Language
Language
- 0Cart
நச்சு இல்லாதது: இதில் கெமிக்கல் எதுவும் இல்லை. உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது.
சுற்றுச்சூழல் நட்பு: இயற்கையான களிமண்ணால் செய்யப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு எந்தக் கெடுதலும் இல்லை.
சத்துக்கள் அதிகம்: முளைகட்டிய பயறுகள் மற்றும் மைக்ரோ கிரீன்ஸில் வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைய இருக்கும்.
செரிமானம் எளிது: முளைகட்டிய பயறுகளைச் சாப்பிட்டால், உணவு எளிதாகச் செரிமானம் ஆகும்.
நார்ச்சத்து: இதில் நிறைய நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் வராது, வயிறு ஆரோக்கியமாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி: உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆரோக்கியமாக இருக்க உதவும்.
எடை கட்டுப்பாடு: கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
அழகு: வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பளபளப்பான சருமத்திற்கும், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும்.
பயறு வகைகள் (கொள்ளு பயறு, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, துவரை), தானியங்கள் (கேழ்வரகு (ராகி), கம்பு, குதிரைவாலி, சாமை, கோதுமை, பார்லி) போன்ற விதைகளை முளைக்க வைக்கலாம். மைக்ரோ கிரீன்ஸ் வளர்க்க கடுகு, வெந்தயம், கோதுமை போன்ற விதைகளும் ஏற்றது.
ஆமாம், பயறுகள் காய்ந்து விடாமல் இருக்க தினமும் ஒரு முறை தண்ணீர் தெளிப்பது அவசியம்.
விதையின் வகையைப் பொறுத்து, முளைகள் 1-3 நாட்களில் வளரும். மைக்ரோ கிரீன்ஸ் பொதுவாக 7-10 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும்.
ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும், நீரில் கொஞ்சம் சோப்பு பயன்படுத்தி நன்றாகக் கழுவி, உலர விடவும்.