அன்னாசிப்பூ - சமையலில் வாசனை கூட்ட சேர்க்கப்படும் ஒரு முக்கியமான மூலிகை வகையாகும், வாசனைக்கு மட்டும் அல்லாது பல்வேறு வகையான பலன்கள் இதில் உண்டு. அன்னாசிப்பூ என்பது சைவம் மற்றும் அசைவ உணவுகளிலும் பயன்படுத்தப்படும் நட்சத்திர வடிவிலான பூ. அன்னச்சப்பூவில் அதிகம் மருத்துவ குணங்கள் உள்ளது. ஆன்டிஆக்ஸிடென்ட், வைட்டமின் எ, வைட்டமின் சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அன்னாசிப்பூ விதைகளில் பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படக்கூடிய பொருள்கள் உண்டு. இதில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும அலர்ஜியை சரி செய்கிறது. நரம்புகளை வலுவாக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது.