
- Search
- Language
Language
- 0Cart
ஆளி விதை என்பது சிறிய, பழுப்பு அல்லது தங்க நிறத்தில் உள்ள ஒரு தானிய வகையாகும். இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் லிக்னான்ஸ் நிறைந்துள்ளன.
இதில் உள்ள அதிக நார்ச்சத்து, நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, தேவையற்ற உணவு உட்கொள்வதைத் தடுத்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.
ஆம், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடி வேர்களைப் பலப்படுத்தி, முடி உதிர்வதைக் குறைத்து, அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவும்.
ஆளி விதையில் உள்ள லிக்னான்ஸ் எனப்படும் கலவைக்கு மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் பண்புகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொடித்துச் சாப்பிடும்போதுதான் அதன் ஊட்டச்சத்துக்கள் உடலில் முழுமையாக உறிஞ்சப்படும். முழுதாகச் சாப்பிட்டால், நார்ச்சத்து மட்டுமே அதிகம் கிடைக்கும்.
ஆளி விதையை அப்படியே மென்று சாப்பிடலாம். அல்லது நீரில் ஊற வைத்தோ அல்லது பொடியாக்கியோ சாப்பிடலாம். லேசாக எண்ணையில் வருது சிறுது உப்பு மிளகு தூள் சேர்த்து ஸ்னாக்ஸ் போல சாப்பிடலாம்.